ரூ.43,000 வரை சம்பளம்… ஆவின் நிறுவனத்தில் வேலை : வெளியானது முக்கிய அறிவிப்பு

Aavin Recruitment 2023: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் (Veterinary Consultant) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள்:

பதவியின் பெயர்: கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி (Veterinary consultant)
காலியிடங்கள் எண்ணிக்கை 1
கல்வித் தகுதி கால்நடை மருத்துவ படிப்புB.V.SC & A.H with Computer Knowledge
பணி காலம் ஓராண்டு
கூடுதல் நிபந்தனைகள் கண்டிப்பாக இருசக்கர ஓட்டுனர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்
சம்பளம் ரூ. 43,000

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் மே மாதம் 17ம் தேதி காலை 11.30 மணி அளவில் படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இதையும் வாசிக்கரூ.30 ஆயிரம் வரை சம்பளம்… பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்..!

நேரடி தேர்வு நடைபெறும் இடம்: கன்னியாகுமரி  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம், நாகோர்கோயில் – 629 003, மின்னஞ்சல் முகவரி: aavinkk@gmail.com, தொலைபேசி எண். 04652 – 230356 ஆகும்.

இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும். பணியின் காலம் ஓராண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment