ரூ.30 ஆயிரம் வரை சம்பளம்… பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்..!

காஞ்சிபுரம் மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மைய நிர்வாகி (Centre Administrator) (காலிப் பணியிடம் -1 )

சமூகப் பணி, உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management)  முதுகலை பட்டம் (Master’s Degree ) பெற்றிருக்க வேண்டும். 

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்.

மாத ஊதியம் ரூ.30,000/ஆகும்.

மூத்த ஆலோசகர் (Senior Counsellor) (vacancy 1)

கல்வித் தகுதி: சமூகப் பணி,  ஆலோசனை உளவியல் M.Sc (Counselling Psychology or Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சி (Development Management) ஆகியவற்றில் முதுகலை பட்டம் M.S.W (Master’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். அல்லது 1 வருட கால அனுபவத்தில், அதே அமைப்புக்குள்ளேயே அல்லது வெளியிலோ பணிபுரிந்திருக்க வேண்டும்.

மாத ஊதியம் ரூ,20.000/- ஆகும்.

உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி வழங்கப்படும்.

இதையும் வாசிக்கரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

வழக்கு அலுவலர்கள் (காலிப் பணியிடங்கள் – 2)

சமூகப் பணி(Social Work) உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சி (Development Management) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும்போது சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.

இதையும் வாசிக்கஅரசு வேலை உங்கள் கனவா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்..!

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடங்கள் 2 )

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

விரும்பும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 22.05.2023 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,  காஞ்சிபுரம் 631 501  என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment