ரயில் டிக்கெட்டுகளை வழங்கும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

Madurai Railway Division jobs: ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் (ATVMs) மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்கும் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

காலியிட விவரங்கள் பின்வருமாறு:-

1. மதுரை ரயில் நிலையம் – 6

2. திண்டுக்கல் ரயில் நிலையம் -5

3. மணப்பாறை ரயில் நிலையம் -2

4. மானாமதுரை ரயில் நிலையம் -2

5. பரமக்குடி ரயில் நிலையம்-1

7.புனலூர் ரயில் நிலையம் -1

8.கொட்டாரக்கரா ரயில் நிலையம் -1

9.திருநெல்வேலி ரயில் நிலையம் -5

10.நாசரேத் ரயில் நிலையம் -1

11.திருச்செந்தூர் ரயில் நிலையம் -1

12.விருதுநகர் ரயில் நிலையம் -2

13.கோவில்பட்டி ரயில் நிலையம் -2

14.சாத்தூர் ரயில் நிலையம் -2

15.சிவகாசி ரயில் நிலையம்-2

16.சங்கரன்கோவில் ரயில் நிலையம் -1

17.புதுக்கோட்டை ரயில் நிலையம் -1

18.உடுமலைப்பேட்டை ரயில் நிலையம் -1

19.பழனி ரயில் நிலையம்-1

20.கடையநல்லூர் ரயில் நிலையம் -1

21.கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் -1

22.செங்கோட்டை ரயில் நிலையம்-3

23.சேரன்மகாதேவி ரயில் நிலையம் -1

24.கீழ புலியூர் ரயில் நிலையம் -1

25.அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் -1

26.பாவூர் சத்திரம் ரயில் நிலையம்-1

27.தூத்துக்குடி ரயில் நிலையம் -1

28. வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் -2

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதாகும். மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் பொதுவான நிபந்தனைகள் மேற்கண்ட ரயில் நிலையங்களின் அறிவிப்புப் பலகைகளில் உள்ளது. குறிப்பிட்ட ரயில் நிலையத்தின் அருகில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே , அந்தந்த ரயில் நிலையத்தில் உள்ள பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் (குரூப் சி மற்றும் டி பணியாளர்கள்) இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை Sr.Divisional Commercial Manager. Southern Railway DRM Office Madurai-625016 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை ரயில்வே கோட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment