யூஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? முக்கிய தகவல் இதோ!!!

2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி தகுதித்தேர்வக்கான (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Keys) விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடைக் குறிப்புகள்: முன்னதாக,  2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதித்தேர்வை (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதற்கான எழுத்துத் தேர்வு, பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்விற்கான உத்தேச விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட இருக்கிறது. உத்தேச விடைத்தொகுப்புடன் (Provisional Answer keys) தேர்வரின் விடைகள் (attempted recorded responses) வெளியிடப்படும். இதன் மூலம், தேர்வர்கள் தாங்கள் பெறப்போகும் மதிப்பெண்களை கணக்கீட்டுக் கொள்ள முடியும்.

மேலும், உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் குறை இருந்தால் (தேசிய தேர்வு முகமை அளித்த பதில் தவறாக இருந்தால்), தேர்வர்கள் முகமைக்கு தெரியப்படுத்தலாம். இருப்பினும், இதற்கான செயல்முறைக்கு ஒரு விடைக்கு ரூ.200-வீதம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதையும் வாசிக்கடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரிசல்ட்: கட் ஆஃப் மதிப்பெண்கள் என்ன? முடிவுகள் யாருக்கு சாதகம் அமையும்?

உத்தேச விடைக் தொகுப்பு முறையீடு முடிந்த இரண்டொரு நாட்களில் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிடும். உதவிப் பேராசிரியர் பணிக்கு, குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்ற தேர்வாளர்களில், இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாடவாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும். தகுதி பட்டியலில் முதல் 6% இடத்தில் உள்ளவர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.

எனவே, அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்கள், https://ugcnet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment