யுஜிசி- நெட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியானது! செக் செய்வது எப்படி?

UGC NET Exam Answer Key: 2022 வருட டிசம்பர் மாதத்துக்கான UGC- NET தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பை (Provisional ANswer Keys) தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சமர்ப்பித்து விடைக் குறிப்பை சரிபார்த்துக் கொள்ளலாம்.    

முன்னதாக, 2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதித்தேர்வை (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதற்கான எழுத்துத் தேர்வு, பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை 5 கட்டங்களாக கணினி வழியாக எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்விற்கான உத்தேச விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. உத்தேச விடைத்தொகுப்புடன் (Provisional Answer keys) தேர்வரின் விடைகள் (attempted recorded responses) வெளியாகியுள்ளது. இதன் மூலம்,  கணினி எழுத்துத் தேர்வின் போது சமர்ப்பித்த பதில்கள் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள முடியும். மேலும், உத்தேச விடைத்தொகுப்பில் உள்ள விடைகளை சரிபார்ப்பதன் மூலம் தங்களது மதிப்பெண்களை தாங்களாகவே கணக்கீடு செய்து கொள்ள முடியும்.

மேலும், உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் குறை இருந்தால் (தேசிய தேர்வு முகமை அளித்த பதில் தவறாக இருந்தால்), தேர்வர்கள் முகமைக்கு தெரியப்படுத்தலாம்.  இருப்பினும், இதற்கான செயல்முறைக்கு ஒரு விடைக்கு ரூ.200-வீதம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்சர் கீ பார்ப்பது எப்படி? 

https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்;

‘Challenge (s) regarding Answer Key’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்;

விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சமர்ப்பித்து உள்நுழைய வேண்டும்;

பின்பு,  “View Question Paper” என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒவ்வொரு கேள்விகளுக்கும் நீங்கள் பதிவு செய்த விடைகளை அறிந்து கொள்ளலாம்.

“Click to view /Challenge Answer Key” என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி விடைத் தொகுப்பை  காணலாம்.

கட்டாயம் வாசிக்க: TNPSC Group 4 Results: குரூப் 4 பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும்? உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

கட் ஆஃப் மதிப்பெண்கள்:    உதவிப் பேராசிரியர் பணிக்கு,  இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாடவாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும். தகுதி பட்டியலில் முதல் 6% இடத்தில் உள்ளவர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போதைய நிலவரங்களைத்     தெரிந்து கொள்வதற்கு, தேர்வர்கள், https://ugcnet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்க்க வேண்டும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment