மத்திய அரசு பணிக்கான எஸ்எஸ்சி தேர்வுகள்… தமிழில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்..!

மத்திய அரசுப் பணிக்கான எஸ்.எஸ்.சி. தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

எஸ்.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணிக்கான தேர்வாணையம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்தி வந்தது. இதனை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த தமிழ்நாடு அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில், அண்மையில் அறிவிக்கப்பட்ட எம்.டி.எஸ். எனப்படும் தொழில்நுட்பம் சாராத பல்துறை பணிகளுக்கான தேர்வு, தமிழ் உட்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு தகுதிக் கொண்ட இந்த தேர்வு மே 2 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்க: மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்…. பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

இதன் நீட்சியாக தற்போது (CHSL) சி.ஹெச்.எஸ்.எல். எனப்படும் 12 ஆம் வகுப்பு தகுதி உடையவர்களுக்கான தேர்வையும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பு மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வங்கி எழுத்தர் மற்றும் ரயில்வே பணிக்கான தேர்வுகளை தமிழில் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment