தேர்வர்களுக்கு நற்செய்தி.. விரைவில் யூஜிசி நெட் தேர்வு முடிவுகள்..!

2022 டிசம்பர் மாதம் நடந்த  உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி தகுதித் தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, 2022 டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதித்தேர்வை (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதற்கான எழுத்துத் தேர்வு, பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து, இந்த எழுத்துத் தேர்விற்கான உத்தேச விடைக் குறிப்பையும், தேர்வரின் பதிவு செய்யப்பட்ட விடைகளையும் (attempted recorded responses)  தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதன் மூலம், தேர்வர்கள் தாங்கள் பெறப்போகும் மதிப்பெண்களை கணக்கீட்டுக் கொள்ள முடியும். மேலும், இந்த உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் குறை இருந்தால் (தேசிய தேர்வு முகமை அளித்த பதில் தவறாக இருந்தால்), தேர்வர்கள் முகமைக்கு தெரியப்படுத்தும் வாய்ப்பு மார்ச் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பல தேர்வர்கள் தங்களது கோரிக்கைகளை தெரியப்படுத்தினர்.

இதையும் வாசிக்கடிஎன்பிஎஸ்சி தேர்வ விடுங்க… மத்திய அரசில் 7,500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது..!

இந்நிலையில், 2022 டிசம்பர் மாத யூஜிசி நெட் தேர்வு வெகு விரைவில் வெளியிடப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்கள் https://ugcnet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

உதவிப் பேராசிரியர் பணிக்கு, இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாட வாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும். தகுதி பட்டியலில் முதல் 6% இடத்தில் உள்ளவர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment