திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் 7 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு இந்து மதத்தைச்சார்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். நேரடி நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 11.05.2023 மாலை வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.

பணி விவரம்

பணி விவரம் காலிப்பணியிடங்கள் சம்பளம்
தட்டச்சர் 1 18,500-58,600
உதவி மின்பணியாளர் 1 16,600-52,400
காவலர் 4 15,900-50,400
பெருக்குபவர் 1 15,900-50,400

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

வயது

விண்ணப்பதாரர் 01.07.2023-ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/25706/1313/document_1.pdf

விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டியவை..

1.பிறந்த தேதியை சரிபார்க்க பள்ளி சான்று நகல்

2.ஆதார் அட்டை நகல்

3.இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க சாதி சான்று நகல்

4.கல்வி சான்று நகல்

5.நன்னடத்தைச்சான்று

6.அனுபவ சான்று நகல்

7.சுயவிலாசமிட்ட ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் 8.உறை ஒன்று.

விண்ணப்பிப்பது எப்படி?

1 விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

2 விண்ணப்ப படிவத்தில் கேட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

3  மேலே குறிப்பிட்டுள்ள சான்றுகளை இணைக்கவும்.

4 முழுமையான விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிடை வரிசை எண் மற்றும் எந்த பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620005

விண்ணப்பிக்க கடைசி நாள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 11.5.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் மேற்கண்ட முகவரியை வந்தடைய வேண்டும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment