தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட வளப்பயிற்றுநர், (District Resource Person) திறன் வளர்ப்பு பயிற்சி பிரிவு (IB& CB) என்ற ஒரு தற்காலிக பணியிடத்திற்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது ஆகும். இதன் மூலம் பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள்/முன்னுரிமை ஏதும் கோர இயலாது.

கல்வித்தகுதி:

Sociology, Social work, Social Work Management ஆகியவையில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்று, 6 ஆண்டு பணி முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

(அல்லது)

ஏதேனும் ஒரு துறையில் பட்டத்துடன், சுய உதவிக் குழுக்கள் திட்டத்தின் கீழ்  சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு பணிகளில் குறைந்தது 8 ஆண்டு பணி முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

1. மேற்படி பணிக்கு விண்ணப்பம் https://tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

2. விண்ணப்படிவத்தில் உள்ள விபரங்கள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும். முழுமையாக பூர்த்தி நிராகரிக்கப்படும். செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக

3. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

4. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

இதையும் வாசிக்க: சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் தொழிற்பயிற்சி: இளைஞர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

இணையவழி விண்ணப்பக் காலம் 31.03.2023 காலை 11.00 மணி முதல் 10-04-2023 மாலை 5.00 மணி வரை ஆகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல், போதிய கால இடைவெளி இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.வேலைவாய்ப்பு அறிவிக்கையை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment