சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை: 84 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

சேலம் மாவட்ட நகர்புற மருத்துவ நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள், பல்நோக்கு சுகாதார உதவியாளர் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது, ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக பணியிடங்களாகும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்  வரும் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரம்: 

பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை வயது கல்வித் தகுதி
மருத்துவர்கள் 28 40 வயது வரை குறைந்தது எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்
பல்நோக்கு சுகாதார பணியாளர் 28 50 பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பட்டம் பெற்றிருக்க  வேண்டும்
உதவியாளர்கள் 28 50 8ம் வகுப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

 தொகுப்பூதியம்: மருத்துவர் பதவிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 60,000 வழங்கப்படும், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பதவிக்கு மாதம் ரூ. 14,0000ம், உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ . 8,500ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான, விண்ணப்பப் படிவங்களை, சேலம் மாவட்ட salem.nic.in இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நல்வாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,பழைய நாட்டாண்மை கட்டட அலுவலகம், சேலம் மாவட்டம் – 636 001 ஆகும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் மார்ச் 10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க:  10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… தமிழ்நாடு அஞ்சல் துறை அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

மேலும், விவரங்களுக்கு தேசிய நல்வாழ்வு குழுமம் (http://nhm.tn.gov.in/en) வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது சேலம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் அலுவலக நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment