சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் அலுவலக உதவியாளர் பணி.. உடனே அப்ளை பண்ணுங்க..!

சென்னையில் செயல்பட்டு வரும் தெற்கு மண்டலத்திற்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவி, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

பதவி: அலுவலக உதவியாளர் (பணி காலம்: 3 மாதங்களுக்கு மட்டுமே)

எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) பெற்றிருக்க வேண்டும்; ஆங்கில தட்டச்சில் அனுபவம் இருக்க வேண்டும்; கணினி அறிவு இருத்தல் வேண்டும். நீதிமன்றம்/ தீர்பாயங்களில் முன்னனுபவம் இருத்தல் விரும்பத்தக்கது ஆகும்.

வயது வரம்பு: 21 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.greentribunal.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  பதிவுத் தபால் மூலமாக 03.05.2023 அன்றைக்குள் Registrar, National Green Tribunal, Southern Zone Bench, kalas Mahal, PWD Estate, Chepauk, chennai – 600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஊதிய விகிதம், பணி தொடர்பான இதர நிபந்தனைகள் அனைத்தும் ஆட்சேர்க்கை அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment