சந்தை தகவல்கள் தொடர்பான இணையதளங்கள்

சந்தை தகவல்கள் தொடர்பான இணையதளங்கள்

தேசிய வேளாண் சந்தை (NAM)

விவசாய விளை பொருள்களுக்குத் தேசிய அளவில் ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்குவதற்காக, ஏற்கனவே செயல்பட்டு வரும் வேளாண் பொருள்கள் விற்பனைக் குழுக்களின் மண்டிகளை ஒன்றிணைந்த மின்னணு வணிகத் தளமே தேசிய வேளாண் சந்தை ஆகும். விவசாய விலை பொருட்களின் வணிகத்திற்கு தேவையான எல்லா விவரங்களையும் தரும் ஓற்றைச் சாளரமாக இது திகழ்கிறது.விற்பனைக்காக வருகின்ற சரக்குகளின் வரத்து, வாங்வோர் அறிவிக்கும் விலை, விற்பனை செய்வோர் அறிவிக்கும் விலை, அறிவிக்கப்பட்டுள்ள விலைக்கு வாங்குவதற்கு  அல்லது விற்பதற்கு இசைவு தெரிவிக்கும் ஏற்பாடு போன்றவை இந்தத் தளத்தில் உள்ளன. இந்த ஆன்லைன் சந்தையில், விவசாய விளை பொருட்களின் வரத்து பற்றி மண்டிகள் மூலமாகத் தகவல்கள் தொடர்ந்து தெரியவருவதுடன், பரிமாற்றச் செலவுகளும் குறைந்துவிடும்.

தேசிய வேளாண் சந்தை சிறப்பு அம்சங்கள்

  • தொடக்கநிலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தேசிய வேளாண் சந்தையில் இணைக்கப்படும். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரும் சரக்குகளுக்கு வெளிப்படையான வியாபாரம் மூலமாகச் சரியான விலை கிடைக்க இந்த ஏற்பாடு பெரும் துணையாகும். இந்த இணைய தளத்தில் சேர விருப்பமுள்ள மாநில அரசுகள் தத்தமது மாநில வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு சட்ட திட்டங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
  • சந்தை வளாகத்தில் கடை இருக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராகி இருக்க வேண்டும், என்பது போன்ற நிபந்தனைகள் இன்றி, வியாபாரிகள், வாங்குவோர், தரகு முகவர்கள் போன்றோருக்குத் தாராளமாக உரிமங்கள் வழங்கப்படும்.
  • வியாபாரிக்கு வழங்கப்படும் ஒரு உரிமம்,  மாநிலத்தின் எல்லாச் சந்தைகளிலும் செல்லுபடியாகும்
  • சரக்குகளை வாங்குகிறவர்கள்,  சரக்கின் தரத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு தமது விலையை அறிவிக்க ஏதுவாக, ஒவ்வொரு சந்தையிலும் சரக்குகளின் தரத்தை மதிப்பிடுவதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எல்லாச் சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் சரக்குகளுக்கான தர அளவீடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை 25 வகையான சரக்குகளுக்குப் பொதுவான வியாபாரத் தர அளவீடுகள் உருவாக்கப் பட்டுள்ளன.
  • ஒரு முனை சந்தைக்கட்டணம் மட்டும் விதிக்கப்படும். அதாவது,  விவசாயியிடம் இருந்து முதல் தடவை மொத்தமாக வாங்குகிற போது மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.
  • தேர்ந் தெடுக்கப்பட்ட சில மண்டிகக்ளுக்கு பக்கத்தில் அல்லது மண்டிகளிலேயே, அங்கு வருகின்ற விவசயிகள் பயன் பெரும் விதமாக மண் பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். நாகார்ஜுனா உரம் மற்றும் வேதித்தொழில் நிறுவனம், இந்த இனையதள வசதிகளை ஏற்படுத்திப் பராமரிக்கும் பொறுப்பில் “செய்ல் உத்திப்பங்காளியாக” (Strategic Partner) உள்ளது. தேசிய வேளாண் சந்தையில் இணைந்து கொள்ள விரும்புகிற மாநிலங்களில் உள்ள மண்டிகளுக்கு வேண்டிய மென்ப்பொருள்களைத் தயாரித்து,  அவற்றைப் புழங்குவதற்கு எளிதாக்கி,  இணையதளவசதியைத் தொடர்ந்து பராமரிப்பது அந்த நிறுவனத்தின் பணியாகும்.

தேசிய வேளாண் சந்தையினால் கிடைக்கும் பயன்கள்

விவசாயிகளுக்கு:

விளைபொருள்களை விற்பனை செய்வதற்கான பலவேறு மாற்றுவாய்ப்புகள் கிடைப்பதுடன், போட்டியின் காரணமாக அதிக விலை கிடைக்கும்.

உள்ளூர் வியாபாரிகளுக்கு

விரிவான தேசியச்சந்தையை எளிதாக  அணுகும் வாய்ப்பும், அடுத்தடுத்துக் கைமாற்றி விற்றுவிடவும் வாய்ப்புகள்.

மொத்தமாக வாங்குபவர்கள், பதனப்படுத்துவோர், ஏற்றுமதியாளர்:

மண்டியில் நடைபெரும் வியாபாரத்தில் நேரடியாக பங்குபெறலாம். அதனால் இடைத்தரகர்களுக்கான செலவு குறைந்து விடும். சீரான விலை நிலவுவதுடன், சரக்குகளும் தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

மண்டிகளுக்கு:

வியாபாரிகளையும் கமிஷன் ஏஜெண்டுகளையும் கண்காணித்து ஒழுங்குபடுத்தியும், ஏல முறையில் அல்லது விலையைக் குறிப்பிடுவதில் வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ முறைகேடுகள் செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறும். சந்தையில் நடைபெறும் எல்லாப் பரிவர்தனைகளும் கணினி மயமாக்கப்படுவதால்,  மண்டி நிருவாகத்திற்கு வரவேண்டிய எல்லாக் கட்டணங்களும் வசூலாகிவிடுவதுடன் பணியாளர்களின் தேவையும் குறைந்துவிடும். ஆயிரக்கணக்கான தொகுதிகளாக சரக்குகள் இருந்தாலும் ஏலத்தில் யார் வெற்றிபெற்றார்கள் என்ற விவரம் சில நொடிகளிலேயே தெரிந்துவிடும். எல்லாப் புள்ளிவிவரங்களும் கணினிமயமாக்கப்படுவதால், சந்தைக்குச் சரக்குகளின் வரத்து எப்படி இருக்கும் என்றும்,  விலை நிலவரம் எவ்வாறு மாறுபடும் என்றும் கணிக்கவும் முடியும்.

அமலாக்கப் பணி

நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 585 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை இணைத்து தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படுகிறது. சிறுவிவசாயிகள் வேளாண் வாணிகப் கூட்டமைப்பு (SFAC) இந்த சந்தையை அமல்படுத்தும் முகாமையாகச் செயல்படுகிறது இதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைச் செய்ல்உத்திப்பங்காளியான நாகர்ஜுனா உரநிறுவனம் வழங்குகிறது. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 400 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தேசிய வேளாண் சந்தையில் இணைக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய 185 விற்பனைக் கூடங்களை இணைக்கும் பணி 2018 மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும். இந்தப் பன்னிக்குத் தேவையான மென்பொருள் உருவாகக்கத்திற்கான செலவை மத்திய அரசின் வேளாண்மை கூட்டுறவு விவசாயிகள் நலத்துறை வழங்குகிறது. உருவாக்கப்படும்  மென்பொருள் மாநிலங்களுக்கு இலவசமாக தரப்படுகிறது. இது தவிர,  தேசிய வேளாண் சந்தையில் இணையும் 585 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கும், (தனியார் மண்டிகளை தவிர) மின்னணு வாணிகத்தளக் கட்டுமானங்களை ஏற்படுத்துவதறகாக தலா ரூபாய் 30 லட்சத்திற்கு மிகாமல் நிதி உதவியையும் மத்திய அரசு வழங்குகிறது. எந்தந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இந்த விதிகளை ஏற்படுத்த  வேண்டும் என்று மாநில அரசுகளே பரிந்துரைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு NAM இணையத்தளத்தைப் பார்க்கவும்)

அக்மார்க்நெட் (AGMARKNET)

உலகளாவிய சந்தைவாய்ப்புகளை எளிதாக அணுகுவதற்குக் கிடைத்துள்ள புதிய வசதிகளின் மூலம்  விவசாயிகள் பயன்பெறும் விதமாக,  நம் நாட்டின் வேளாண் விற்பனை ஏற்பாடுகள் யாவும் ஒன்றிணைக்கப்பட்ட வலுப்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் தமது விளை பொருள்களை கிராமப்புற சந்தைகளிலும் ஒழுங்கப்படுத்தப்படாத மொத்த விற்பனை மண்டிகளிலும் விற்பதைவிடவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்கும்போது சற்றுக் கூடுதலான விலையைப் பெறுகிறார்கள் என்பது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வு இயக்ககம் (Directorate of marketing and inspection), வேளாண்மைச் சரக்கு சந்தைப்படுத்தும் தகவல்முறைக் கட்டமைப்பு (AGMARKET-Agricultural Marketing Information system Network) ஒன்றை வெற்றிகரமாக நடத்திவருகிறது. இதன் மூலம், முக்கியமான அனைத்து வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுக்கள், மாநில அரசுகளின் வேளான் விற்பனை வாரியங்கள், இயக்ககங்கள், வட்டார அலுவலகங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து விவசாய சரக்குகளின் விலை நிலவரம் பற்றிய செய்திகள் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன. தேசிய தகவலியல் மையம் (NIC) இத்திட்டத்தின்  செயல்பாட்டிற்கு உற்றதுணையாக உள்ளது.

(மேலும் விவரங்களுக்கு AGMARKNET இணையத்தளத்தைப் பார்க்கவும்)

வேளாண்மைச் சரக்கு விற்பனை / சந்தைப்படுத்தல் சம்பந்தப்பட்ட வேறுசில இணைய தளங்கள்

1) தினசரி விலை மற்றும் தோட்டக்கலை பொருள்கள் வரத்து (NHB)

2) வேளாண் இணைப்பகம் (APEDA)

3) வேளாண் கண்காணிப்பு (Agri watch)

4) காய் கனி மேம்பாட்டுக்கு கவுன்சில், கேரளம்

5) கமாடிட்டி இந்தியா

6) தேசிய மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் (NMCE)

7) தேசிய காமடிடீஸ் & டிரைவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ்(NCDMX)

8) பெரிய துறைமுகங்களில் தினசரி மீன் வரத்து (CMFRI)

9) தினசரி சந்தைகளில் வரத்தும் விலையும் (NHRDF)

10) பட்டுச் சரக்குகளுக்கு தினசரி / மாதாந்திர / காலாந்திர விலை விவரங்கள்.

11) காபி வாரியத்தின் காபி அங்காடிவிலை.

12) தேயிலை வாரியத்தின், மாதந்திர தேயிலை ஏலத்தின் சராசரி விலை

13) நறுமணப் பொருள் வாரியத்தின் சந்தை விலை

14) காடுகளில் தயாராகும் சிறுபொருள்கள் சந்தை விலை

15) அசாமின் சிறுவிவசாயிகள் வேளாண் வாணிகக் கூட்டமைப்பு

16)  இ-வியாபார் (வாங்குவோர் – விற்போர் களம்)

Related posts