பட்ஜெட் 2023 – இயற்கை வேளாண்மை, மீன்வளம், தோட்டகலைக்கான முக்கிய அறிவிப்புகள் இதோ!

2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5ஆவது பட்ஜெட் இது. மேலும், அடுத்தாண்டு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போதைய மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே. எனவே, இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருந்ததது.

இந்நிலையில், வேளாண் துறை சார்ந்து பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியானது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது, “வேளாண்துறையில் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக வேளாண் ஸ்டார்ட் அப் தொடங்க தனி நிதி ஒதுக்கப்படும். கடந்த ஆறு ஆண்டுகளில் வேளாண் துறை சராசரியாக 4.6 விழுக்காடு என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.

நாடு முழுவதும் வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு, பால் உற்பத்தி, மீன்வளம் ஆகிய துறைகளை வளர்க்க ரூ.20 லட்சம் கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதைய மத்ஸய சம்பதா என்ற திட்டத்துடன் மீன் வளத்துறைக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மீனவர் நலனுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கப்படும்.

இதையும் படிங்க: மேலும் உயரும் தங்கம், வெள்ளி விலை.. வரி அதிகரிப்பால் ஷாக் கொடுத்த பட்ஜெட்!

அடுத்த 3 மூன்றாண்டுகளில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக ஒரு கோடி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கி உதவ அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 10,000 பயோ உள்ளீட்டு வள மையங்களை அரசு அமைக்கவுள்ளது. திணை ஏற்றுமதியில் இந்தியா சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. நாட்டில் திணை பொருள் வேளாண்மைக்கு தனி கவனம் கொடுத்து மேம்படுத்தும் விதமாக ஹைதராபாத்தில் தேசிய திணை ஆய்வு மையத்தை அரசு அமைக்கவுள்ளது.

தோட்டக்கலை துறை வளர்ச்சிக்காக ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறையை லாபகரமாக மாற்ற அரசு-தனியார் கூட்டு மாடலில் செயல்படுத்த அரசு முனைப்புடன் உள்ளது” எனத் தெரிவித்தார்.  இந்த பட்ஜெட்டில் PM KISAN திட்டத்தின் உதவித்தொகை ரூ.6,000இல் இருந்து ரூ.8,000 உயரத்தப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், அத்தகைய அறிவிப்பு ஏதும் நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை. அதேபோல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதி ஒதுக்கீடும் கடந்தாண்டை ஒப்பிடும்போது குறைக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment