போலீஸ் வேலையை உதறிவிட்டு விவசாயம், ஆடு வளர்ப்பு, ஜிம்.. பிசினஸில் கலக்கும் தஞ்சை இளைஞர்..!

தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (36). இவர் கடந்த 2009ம் ஆண்டிலிருத்து சுமார் 10 ஆண்டுகள் தமிழ்நாடு காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவியும் தற்போது காவல்துறையில் கான்ஸ்டபிளாக தஞ்சையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு தற்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் தஞ்சையில் பவர் ஸ்மேக் என்ற ஃபிட்னஸ் சென்டரையும் நடத்தி வருகிறார்.

பிஸினஸ் மேனாக மாறியது எப்படி?

சிறுவயதில் இருந்தே காவல்துறையில் சிறந்த காவலராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ள இவருக்கு வேலையில் உள்ள சில சங்கடங்ளை ஏற்படுத்தும் செயல்களாலும், ஊதிய உயர்வு இல்லை என்பதாலும் மற்றும் காவல்துறையில் இவர் சகித்து கடந்துபோன பல நிகழ்வுகளாலும் தனக்கு போலீஸ் வேலை வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு வந்துள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

போலீஸ் வேலையை உதறிவிட்டு விவசாயம் பார்க்கும் இளைஞர்

இதை பற்றி தன் பெற்றோரிடம் கூட சொல்லிக்கொள்ள வில்லையாம். விடுமுறையில் இருப்பதாகவே ஆரம்பத்தில் சொல்லியுள்ளார். மனைவிக்கும் தெரியாமல் இருக்க போவதில்லை. எனவே அவரிடம் வேலையை விட்டு நிற்கலாம் என்று நினைக்கிறேன் என்றும், பிஸினஸ் மற்றும் நம்ம கிராமத்திலேயே விவசாயம், ஆடு, கோழி வளர்கலாம்னு இருக்கேன் என்று மனைவியிடம் மனம் திறந்துள்ளார். அவர் கணவரின் மேல் உள்ள நம்பிக்கையால் முழு ஒத்துழைப்பை தந்துள்ளார்.

இதையும் படிங்க : பாரதியாருக்கு பணம் கொடுத்து உதவியவர்.. வ.உ.சிக்கு நெருக்கமான நட்பாளர் பரலி சு.நெல்லையப்பர் பற்றி தெரியுமா?

இவருடன் வேலை செய்த மற்ற போலீசார் இவரிடம் இது தவறு என்று எடுத்துக் கூறியும், யாரிடமும் இதை பற்றிய கருத்துக்களை கேட்காமல் தன்வழியில் பயணிக்க, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மாற தன்னை தயார் படுத்திகொண்டு வந்துள்ளார்.

சொந்த கிராமத்திலேயே..

தன்னுடைய சொந்த கிராமத்திலேயே அப்பா செய்து வந்த விவசாய வேலையை தற்போது இருக்கும் கால சூழலுக்கு ஏற்ற லாபம் தரக்கூடிய தொழிலாக மாற்றயோசித்து, ஆடு வளர்ப்பில் இறங்கி இவருடைய சொந்த நிலயமான 3 ஏக்கரில் 2 ஏக்கர் ஆடுகளுக்குத் தேவையான தீவனங்களை வளர்த்து ஆடு வளர்ப்பில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டுள்ளார்.

கேள்விகேட்ட பெற்றோர்

இப்படியேபோக, இவரின் தாய் தந்தையர், ‘என்னப்பா லீவுனு சொன்ன 6 மாசம் ஆயிருச்சு ஊர்ல உள்ளவங்கலாம் ஒரு மாறி பேசிக்குறாங்க என்ன ஆச்சு உனக்கு, விவசாயத்தையும் ஆடுகளையுமே பாத்துட்டு வர, எப்ப தான் வேலைக்கு போறது’ என கேட்க. ஒரு நாள் குடும்பத்தாரிடம் ‘இனிமேல் நான் வேலைக்கு போக மாட்டேன்.

இதையும் படிங்க : முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – நெல்லை ஆட்சியர் அறிவிப்பு!

குடும்பத்தை நல்ல வழியில் கொண்டு போக எனக்கு தெரியும். என்னை பத்தி கவலைப்படாதீங்க நா இனி பிஸினஸ் – விவசாயம் – ஆடு வளர்ப்பு இதை தான் இனி முழு நேரம் பன்ன போறேன்னு’ என்று செல்லியுள்ளார். அந்த 6 மாதத்திலேயே சரியான வழியில் போதிய வருமானம் சம்பாதிக்க தொடங்கிய நிலையில் பெற்றோரும் புரிந்து கொண்டதாக சொல்கிறார் மகிழ்ச்சியோடு.

போலீஸ் வேலையை உதறிவிட்டு விவசாயம் பார்க்கும் இளைஞர்

மிகப்பெரிய ஃபிட்னஸ் சென்டர்

தற்போது தஞ்சையிலேயே மிகப்பெரிய ஃபிட்னஸ் சென்டரை நடத்துவதுடன், விவசாயம், ஆடு வளர்ப்பு என முழு நேரமும் பிஸியாக இருந்து வருகிறார். காலை 5 மணியில் தொடங்கி ஃபிட்னஸ் சென்டர், அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்திற்கு சென்று விவசாயம், தீவன உற்பத்தி, ஆடு வளர்ப்பு, அப்பா‌விற்கு அதிக சிரமத்தை கொடுக்காமல் அணைத்து வேலையிலும் பம்பரமாக செயல்பட்டு மீண்டும் ஃபிட்னஸ் சென்டர் பிஸினஸ் என பம்பரமாய் சுழன்று வந்து 11 மணி உரக்கத்தை தொடர்கிறார்.

அரிய புல் வகை 

ஆரம்பத்தில் 150 ஆடுகள் வளர்த்து வந்த இவர், தற்போது சுமார் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். 3 ஏக்கரில் 1 ஏக்கர் நெல் சாகுபடியும் , 2 ஏக்கர் முழுவதும் தீவனங்களையும் பயிரிட்டு வருகிறார். இதில் முக்கியமாக ஆடுகளுக்கு அதிக சத்துக்களையும் ஆரோக்கியமான உடல் எடையை அதிகரிக்கும் ஜிஞ்சுவா எனப்படும் வட மாநிலங்களில் விலையக்கூடிய புல் வகையை 75%-மும், வேலி மசால், மல்பெரி, அகத்தி, சூப்பர் நேப்பியர் தாவர வகை பில் வகைகளையும் பயிரிட்டு தன் ஆடுகளுக்கும், நம் ஊரில் கிடைக்காத ஜிஞ்சுவா போன்ற பில்லின் பயிர் குச்சிகளை வெளி ஊர்களில் கால்நடை வளர்ப்பவர்களிடம் விற்பனை செய்தும் வருகிறார்.

ஆடு வளர்ப்பு

இதுபோன்ற புல் வகையை உண்ணும் இவரின் ஆடுகளை பார்த்தபோது, துரு துரு வென்று முட்டி மோதி விளையாடிக் கெண்டிஇருந்தன. பொதுவாகஆட்டு பண்ணைக்கு சென்றால் மூக்கை பொத்திகொள்வோம் அல்லவா, ஆனால் இவரின் பண்ணையில் அந்த துர்நாற்றம் கூட வீசாமல் பராமரிப்பில் கில்லியாக இருந்து வருகிறார். மேலும் விவசாயம், ஆடு வளர்ப்பு, புல் பயிர் குச்சி விற்பனை, மூலமாக கிடைக்கும் லாபம், ஃபிட்னஸ் சென்டர் என இவருடைய ஒரு மாதம் வருமானம் ஆறிலக்க எண்ணை எட்டும் என்று சொல்லப்படுகிறது.

தீவிர சிவ பக்தர் 

இவருடைய ஃபிட்னஸ் சென்டருக்கு சென்றபோது, அது மிகப்பெரிய அளவில் செம, லுக்காக இருந்தது. அனைவரிடமும் சிரித்தபடி புன்னகையோடு தனது நண்பர்களாக பழகி வருகிறார். ஜிம் மாஸ்டராக வேறு முகம் காட்டுகிறார். பிடித்த லைஃப் ஸ்டைலை உருவாக்க போராடி, தற்போது தனக்கேற்ற லைஃப் ஸ்டைலை தனி ஆளாகவே உருவாக்கியுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் பவர்ஃபுல் மோட்டிவேஷனோடு சிவன் மேல் உள்ள அதீத அன்பால் நமச்சிவாய என கூறி ஒவ்வொரு நாளும் தன்னுடைய வாழ்க்கையை தனக்கு பிடித்ததுபோல் கடினமாக உழைத்து 2027 வாழ்க்கையில் எண்ணிய வெற்றிகளை அடைய ஓடிக்கொண்டே இருக்கிறார் சதீஷ்.

தோனியின் தத்துவம் 

இருக்கமான வாழ்கையில் பிடிக்காத வேலையை பார்த்துகொண்டு ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதற்கும் ஓராயிரம் பேரிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருக்கிறோம். மேலும்  பாதியிலேயே எடுத்த முடிவை விட்டு பாதியிலேயே தன்னம்பிக்கை இழந்து, சோர்ந்து செல்பவர்களுக்கு மத்தியில், துணிந்து சென்றால் எதுவும் வெற்றியே PROCESS IS MORE IMPORTANT THAN RESULT என்ற தல தோனியின் தத்துவத்தை ஏற்று இலக்கை நோக்கி ஓடும் சதீஷ் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் ,வழிகாட்டியாகவும் விளங்கி வருக்கிறார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment