விவசாயிகள் இந்த 3 திட்டத்தின் பயன்களையும் பெறலாம்!

இந்திய நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் விவசாயத்தை சிறப்பான முறையில் மேம்படுத்த பல்வேறு நல திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. குறிப்பிட்ட சில திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் விவசாயத்திற்காக செலவு செய்யும் வகையில் இத்திட்டங்கள் வடிவைக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கிய விவசாய திட்டமான பிரதன் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிங்களின் வங்கி கணக்கில் ஒவ்வொரு வருடமும் ரூ.6000 அனுப்பப்படும். இதை ரூ.2000 ஆக பிரித்து ஒரே ஆண்டில் மூன்று முறை அனுப்பப்படும்.

அந்த வகையில் இந்த திட்டம் அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை 9 தவணை முறை, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு உதவி தொகை செலுத்தப்பட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 15ம் தேதி 10 ஆவது தவணைக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று வேறு சில முக்கிய விவசாய திட்டங்களையும் ஒன்றிய அரசு ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. ஆனால் பல விவசாயிகளுக்கு இதை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததால் இந்த நல திட்டங்களை பெறாமல் விட்டு விடுகின்றனர். இந்த திட்டங்கள் அனைத்துமே சொந்த நிலம் உள்ளவர்களுக்கு பொருந்தும். மேலும் இந்த உதவி தொகை வாழ்வாதாரம் இல்லாத விவசாயிகளின் கடைசி காலத்தில் பெரிய அளவில் உதவும்.

பிஎம் கிசான் மான்தன் யோஜனா :

விவசாயம் செய்யும் பலருக்கும் இந்த பிஎம் கிசான் மான்தன் யோஜனா திட்டம் மிக பெரிய அளவில் உதவியாக இருக்கும். இத்திட்டத்தின் படி விவசாயிகள் தங்களது கடைசி காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ ரூ.3000 பென்ஷன் தொகையாக பெறுவார்கள். இதற்கு pmkisan.gov.in என்கிற இணையதளத்திற்கு சென்று தங்களுக்கான அக்கவுண்ட்டை திறந்து, ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை பணம் செலுத்த வேண்டும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரலாம். 60 வயதை கடக்கும்போது இந்த சேமிப்பு பணமானது ரூ.3000 பென்ஷன் தொகையாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். சிறு குறு விவசாயிங்களின் துணைவியாரின் பெயரிலும் இத்திட்டத்தை தொடங்கலாம்.

பிஎம் கிசான் கிரெடிட் கார்டு :

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு கிரெடிட் கார்டு பெரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி குறைந்த அளவு வட்டியில் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

Also read… இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள Moto-வின் புத்தம் புதிய 3 ஸ்மார்ட் ஃபோன்கள்!

பிஎம் கிசான் ஐடி கார்டு :

இனி வரும் காலங்களில் பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் பதிவு செய்துள்ளோருக்கு அவர்களின் தரவுகளின் படி குறிப்பிட்ட மாநில திட்டங்களின் உதவி தொகை கிடைக்கும் வகையில், பிஎம் கிசான் ஐடி கார்டு வழங்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கார்டானது நிலத்தின் பதிவுகளோடு இணைக்கப்பட்டு அவரவர்களுக்கு தகுதியான உதவி திட்டங்களை பெறும்படி செய்யப்படும்.

மேற்சொன்ன நல திட்டங்களை விவசாயிகள் சிறப்பான முறையில் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment