உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற வேண்டுமா? தஞ்சை விவசாயிகளே இதை தெரிஞ்சுக்கோங்க!

உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற என்ன செய்ய வேண்டும் என சேதுபாவாசத்திர வட்டார வேளாண் உதவி இயக்குனர்(பொறுப்பு) சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடைப்பருவத்தில் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை உளுந்து பயிர் சாகுபடிக்கு ஏற்ற காலமாகும். உளுந்து பயிர் விதைப்பு செய்தவற்கு முன்பாக விதை மூலம் பரவக்கூடிய வேரழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு 1 கிலோ விதைக்கு டிரைகோடெர்மா விரிடி என்ற எதிர் உயிர் பூஞ்சானம் 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

பின்னர் பயறு வகை பயிர்களுக்குரிய ரைசோபியம் என்ற நுண்ணுயிர் உரத்தை 200 கிராமுடன், அசோஸ்பைரில்லம் 200 கிராம் என்ற உயிர் உரம் சேர்த்து 160 மில்லி ஆறிய அரிசி கஞ்சியுடன் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் கலந்து 1 நாள் முழுவதும் நிழலில் உலர்த்தி பின்னர் உயிர் உர நேர்த்தி செய்த விதைகளை 24 மணி நேரத்திற்கு பின் விதைப்பு செய்ய வேண்டும்.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

இவ்வாறு விதைப்பு செய்யும்போது காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து வேர் முடிச்சுகளில் சேமித்து வைத்துக் கொண்டு பயிர் வளர்ச்சிக்கு உதவுவதால் தழைச்சத்து இடுவதை குறைத்து கொள்ளலாம். இதனால் சாகுபடி செலவு குறைகிறது. தரிசு நிலத்தில் விதைப்பு செய்ய ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானது. அதேசமயம் நஞ்சை தரிசில் விதைப்பு செய்யும்போது 1 ஏக்கருக்கு 10 கிலோ விதை போதுமானது.

இதை அறுவடை செய்வதற்கு 8 லிருந்து 10 நாட்களுக்கு முன்பாக விதை நேர்த்தி செய்து விதைகளை தூவ வேண்டும். அப்போதுதான் அனைத்து விதைகளும் முளைக்கும் இவ்வாறு தொழில் நுட்பங்களை கடைப்பிடிக்கும்போது எக்டேருக்கு 630 கிலோ வரை மகசூல் பெறலாம். பயறு வகை பயிர்களில் உற்பத்தியையும் சாகுபடி பரப்பையும் அதிகப்படுத்துவதற்காக தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் சான்று பெற்ற உளுந்து விதை வினியோகிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான வம்பன் 8,10,11 ஆகிய உளுந்து விதைகள் போதுமான அளவு வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் கையிருப்பில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் மானிய விலையில் விதைகளை பெற்று பயன்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment