களை எடுக்கும் கருவியை உருவாக்கி ரூ.9 லட்சம் வரை சேமிக்கும் தேனி விவசாயி!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் தக்காளி, மிளகாய், கத்தரி ஆகிய பயிர்களை விவசாயம் செய்து வருகிறார் விவசாயி சுகுமார். இவர்டிராக்டரில் சிறிய அளவிலான கலப்பை பொருத்தி களை எடுக்கும் கருவியை உருவாக்கி களை எடுத்தபொழுது, 100% பயன் தருவதாகவும், இதன் மூலம் அதிகபட்சமாக ஆண்டு ஒன்றுக்கு ஒன்பது லட்சம் ரூபாய் வரை செலவுகள் குறைந்து,சேமிப்பு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விவசாயம் :

தேனி மாவட்டத்தில் நெல்பிரதான பயிராக இருந்தாலும், திராட்சை தென்னை, வாழைக்கு அடுத்தபடியாககாய்கறி விவசாயம் செய்வதிலும்இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காய்கறி விவசாயத்தில் பெரும்பாலும் குறுகிய காலத்தில் அறுவடை நடைபெறும் என்பதால் ஆண்டுக்கு மூன்று அல்லது 4 முறை அறுவடை செய்யும் நோக்கத்தோடு விவசாயிகள் ஆர்வத்துடன் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

லாபகரமான விவசாயம் மேற்கொள்வது குறித்து பல்வேறு முயற்சிகளை தேனி மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தேவைக்கு ஏற்றார் போல் பயிரிடுதல், கால நிலைக்கு ஏற்ப பயிரிடல் , வெளிநாட்டு ஏற்றுமதிக்கு ஏற்றார் போல் பயிரிடுதல் ஆகியவற்றின் மூலம் விவசாயத்தை லாபகரமான மேற்கொள்ள முடியும் என்று மற்ற மாவட்ட விவசாயிகளுக்கு முன் மாதிரியாக திகழ்கின்றனர். அதே நேரத்தில் விவசாயத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்தும் பொழுதும் கூடவிவசாயத்தில் லாபம் பார்க்க முடியும் என்று கூறுகிறார் சுகுமார்.

இதையும் படிங்க : மதுரை மக்களே உஷார்.. நாளை மின் தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

விவசாயத்தில் ஏற்படும் செலவு :

விவசாயத்தில் தேவைக்கேற்ப வரவு வந்தாலும் செலவுகளை குறைத்துக்கொள்ள விவசாயிகளுக்கு தெரியாததால் பெரிய அளவிலான லாபத்தை விவசாயிகளால் ஈட்ட முடியவில்லை. ஆட்கூலி செலவு, களை எடுக்கும் செலவு , உரச்செலவு ஆகியவற்றிற்கு தேவைக்கு ஏற்ப செய்தால் விவசாயிகளால் லாபத்தை பார்க்க முடியும்.

15 அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டிய தேவை இருப்பதால் களை எடுப்பதற்கான ஆட்கூலி செலவு விவசாயிகளை பெரிதும் அச்சமடைய வைக்கிறது. களை எடுக்கும் செலவை குறைப்பதற்கு நவீன கருவிகள் பல இருந்தாலும் அனைத்து விவசாயிகளால் நவீன கருவிகளை வாங்க முடியாத நிலை இருக்கிறது. இந்த சூழலில் தேனி பகுதி விவசாயிகள் தங்களிடம் உள்ள எளிய கருவிகளை பயன்படுத்தி களை எடுப்பதால்பல ஆயிரங்களைமிச்சப்படுத்தி வருகின்றனர்.

புதிய வகையான கருவி :

அந்த வகையில் தேனி மாவட்டம் காமயக்கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்ற விவசாயி டிராக்டரில்பொருத்தும் கலப்பையை போன்ற வடிவில் உள்ள எளிய களை எடுக்கும் கருவியை உருவாக்கி அதன் மூலம் களை எடுத்து வருகிறார். இதன் மூலம் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை சேமிப்பதாக கூறுகிறார் சுகுமார்.

இதையும் படிங்க : கொரோனாவால் வேலையிழந்து நாடு திரும்பியவர்களுக்கு குட்நியூஸ்.. சுயதொழில் தொடங்க கடனுதவி!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஏக்கர் பரப்பளவில் மிளகாய், கத்திரிக்காய், தக்காளி ஆகிய காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார் சுகுமார். தொழிற்கல்வி படித்த உடன் ராணுவத்தில் சேர்ந்து 6 ஆண்டுகள் பணிபுரிந்து பின் விருப்ப ஓய்வு பெற்று விவசாயத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.தொடக்கத்தில் விவசாயத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த இவருக்குகைகொடுத்தது தான் கற்ற தொழிற்கல்வி தான். அதன் மூலம் எளிய விவசாய கருவிகளை உருவாக்கி அதை பயன்படுத்தி விவசாயத்தில்லாபம் ஈட்ட தொடங்கியுள்ளார்.

10 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வந்த இவர் ஒரு ஏக்கரில் களை எடுப்பதற்கு மட்டுமே15 முதல் 17 வேலையாட்கள் வரை தேவைப்பட்டுள்ளது. ஒரு ஆளுக்கு கூலியாக350 ரூபாய் கொடுக்க வேண்டிய தேவையும் இருந்துள்ளது. வேலை ஆட்களை வைத்து களை எடுக்கும் பொழுது பத்து நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டிய அவசியமும் இருந்துள்ளது.

இதனால் களை எடுப்பதற்கான செலவுகள் அதிகரிப்பதால் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து யோசித்து வந்துள்ளார். தன்னிடம் இருக்கும் டிராக்டரை பயன்படுத்தி டிராக்டரின் பின்பக்கம் இருக்கும் டில்லரில் பழைய கம்பிகளை வைத்து களை எடுப்பதற்கான எளிய வடிவமைப்பில்ஒரு கருவியை உருவாக்கியுள்ளார். இந்த கருவி சமவெளிகளில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு100% பயனுள்ளதாக அமையும்” என கூறுகிறார் சுகுமார்.

செலவு மிச்சம் :

இந்தக் கருவியை பயன்படுத்தி களை எடுக்கும் பொழுது மூன்று முதல் நான்கு இன்ச் வரை தரைக்கு அடியில் சென்று களையின்வேரைஅறித்து எடுப்பதால் மீண்டும் கலை உருவாக்குவதற்கு 15 முதல் 30 நாட்கள் வரை ஆகிறதாம்.புதிய களை உருவாகாமல் இருப்பதால் பல்லாயிரம் ரூபாய் மிச்சப்படுத்துவதாகவும் மண்ணைப் பிரட்டி போடுவதால்செடிகளுக்கு பிடிமானம் அதிகரிப்பதாகவும் கூறுகிறார் சுகுமார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

டிராக்டர் மூலம் களை எடுப்பதற்கு ஏதுவாக நிலத்தின் விளிம்பில் டிராக்டர் திரும்ப 8 அடி அளவு சிறிய அளவில் இடம் விட வேண்டும் எனவும், இந்த எட்டு அடியில் வைக்க வேண்டிய லாபம் மற்ற இடத்தில் இருந்து கிடைக்கும் எனவும் , டிராக்டர் மூலம் களை எடுக்கும் பொழுது செடிகளுக்கு சேதாரம் ஏற்படாது எனவும் கூறுகிறார். இந்த கருவியை பயன்படுத்தி களை எடுக்கும் பொழுது அதிகபட்சமாக ஒன்பது லட்சம் வரை சேமித்து வருவதாக கூறுகிறார் விவசாயி சுகுமார். விவசாயிகள் இது போன்றுஎளிய கருவிகள் மூலம் சிறிய முயற்சிகள் எடுத்து விவசாயம் செய்தால் பெரிய லாபம் அடைய முடியும் என்பதற்கு விவசாயிசுகுமார்ஒரு எடுத்துக்காட்டு.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment