வேளாண் பட்டதாரிகளா நீங்கள்? அரசு தரும் ரூ.3 லட்சம் மானியத்தை பெறுவது எப்படி தெரியுமா?

புதுவை கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் (பயிற்சி வழி தொடர்பு திட்டம்) அலுவலகம் மூலமாக வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மானியமாக வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.3 லட்சமும், சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களுக்கு ரூ.75 ஆயிரமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் ஆர்வமுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பங்களை தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குனர் பயிற்சி வழி தொடர்பு திட்ட அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையதள பதிவிறக்கம் www.agri.py.gov.in மூலம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விரிவான திட்ட அறிக்கைகளுடன் மே மாதம் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ALSO READ | புதுச்சேரியில் 108 இசை வாத்தியங்களுடன் ஜோராக நடந்த அய்யனார் திருக்கல்யாணம்!

உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)

புதுச்சேரி

புதுச்சேரி

எனவே தகுதி வாய்ந்த விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வேளாண் சுயதொழில் தொடங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment