காஞ்சியில் குலுக்கல் முறையில் நெல் கொள்முதல்.. போட்டா போட்டியை தவிர்க்க விவசாயிகள் புதிய முயற்சி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் நெற்பயிர்கள் அறுவடை செய்து, நெல் விற்பனை செய்ய தயாராகி வருகின்றனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 126 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்ட கிராமப்புறங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்து வருகின்றனர். இந்நிலையில் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிரை பயிரிட்டு அறுவடை செய்து விற்பனைக்கு தயாராகி உள்ளனர். இந்நிலையில் பரந்தூர் கிராம பகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கியுள்ளது. பரந்தூர் கிராம பகுதியில் அதிக அளவில் நெல் பயிரிடும் விவசாயிகள் உள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லை விற்பனை செய்வதில் போட்டோ போட்டி ஏற்பட்டது.

இதையும் படிங்க : களை எடுக்கும் கருவியை உருவாக்கி ரூ.9 லட்சம் வரை சேமிக்கும் தேனி விவசாயி!

உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

இதன் காரணமாக விவசாயிகளுக்குள் சண்டை, சச்சரவுகளும், பகையும் ஏற்படும் சூழல் இருந்தது. இதனால் பரந்தூர் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே ஒன்று கூடி முன்மாதிரியாக சிறிய விவசாயிகள், பெரிய விவசாயிகள், என்ற பாகுபாடு ஏதுமின்றி நெல்லை விற்பனை செய்வதில் போட்டோ போட்டி ஏற்படாத வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் நோட்டுப் புத்தகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு, குலுக்கல் முறையில் எந்த வரிசையில் நெல் கொள்முதல் செய்வது என சீட்டு குலுக்கி போட்டு தேர்வு செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆங்காங்கே அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதல் செய்வதில் விவசாயிகளுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டு வரும் நிலையில் பரந்தூர் கிராம விவசாயிகள் முன்மாதிரியாக செயல்பட்டு ஒற்றுமையுடன் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லினைகொள்முதல் செய்ய குலுக்கல் முறையை அறிமுகப்படுத்தியது, அனைத்து தரப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment