“ஒரு கிலோ தக்காளி ரூ.5 தானா?…”

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உரிய விலை கிடைக்காத விரக்தியில் விவசாயி ஒருவர், தக்காளியை ஆற்றில் கொட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரிப்பால், ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், செலவு செய்த பணம் கூட கைக்குக் கிடைக்காததால் தக்காளிகளை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டு ஆடு, மாடுகளுக்கு உணவாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், பதிமடுகு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் என்பவர், சாகுபடி செய்த 3 டன் தக்காளியைக் கிருஷ்ணகிரி சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு சென்றுள்ளார். அங்கு தக்காளியை விற்க முடியாமல் வேதனையில் இருந்த அவர், மார்க்கண்டேயன் நதியில் தக்காளியைக் கொட்டிச்சென்றுள்ளார்.

Also Read : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… மீண்டும் 45,000 ரூபாயை தாண்டியதால் நகை பிரியர்கள் ஷாக்..!

இதனிடையே, கோடை வெயிலின் தாக்கத்தால் தென்காசியில் எலுமிச்சை விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு பழம் 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ எலுமிச்சை, 100 ரூபாய் முதல் 120 ரூபாயாக அதிகரித்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment