எள் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

எள்

கோடை மற்றும் எல்லா கால நிலைகளிலும் விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை அளிக்கும் எள் சாகுபடி முறையை பற்றி நாம்  இந்தத் தொகுப்பில் காண்போம்.

பருவம் மற்றும் இரகங்கள்

கீழ்வரும் பகுதியில் எள் ரகங்கள் மற்றும் பயிரிட உகந்த காலங்கள் தெளிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

மண்டலம்/ மாவட்டம்/பருவம் விதைக்கும் மாதம் இரகங்கள்
I. மேற்கு மண்டலம் (இறவை)
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு
மாசிப்பட்டம் பிப்ரவரி- மார்ச் TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
மேற்கு மண்டலம் (மானாவாரி)
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல்
ஆனிப்பட்டம் ஜூன்- ஜூலை CO 1, TMV 3,TMV 7
தேனி
கார்த்திகை நவம்பர்- டிசம்பர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2
II. தெற்கு மண்டலம் (இறவை)
திருநெல்வேலி, கரூர்
சித்திரைப்பட்டம் ஏப்ரல்- மே TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
புதுக்கோட்டை
மார்கழி டிசம்பர்- ஜனவரி TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
தெற்கு மண்டலம் (மானாவாரி)
மதுரை
ஆனிப்பட்டம் ஜூன்-ஜூலை CO 1, TMV 3,TMV 7
விருதுநகர், புதுக்கோட்டை,
ஆடிப்பட்டம் ஜூலை-ஆகஸ்ட் CO 1, TMV 3,TMV 7
கரூர்
புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்- அக்டோபர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2
இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி
கார்த்திகைப்பட்டம் நவம்பர்- டிசம்பர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2
III. வட கிழக்கு மண்டலம் (இறவை)
காஞ்சிபுரம், கடலூர், வேலூர்
மார்கழிப்பட்டம் டிசம்பர்- ஜனவரி CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2
திருவண்ணாமலை
மாசிப்பட்டம் பிப்ரவரி- மார்ச் TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
விழுப்புரம்
சித்திரைப்பட்டம் ஏப்ரல்- மே TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
திருவள்ளூர்
ஆனிப்பட்டம் ஜூன்-ஜுலை CO 1, TMV 3,TMV 7
வட கிழக்கு மண்டலம் (மானாவாரி)
வேலூர், திருவண்ணாமலை
ஆனிப்பட்டம் ஜூன்-ஜூலை CO 1, TMV 3,TMV 7
காஞ்சிபுரம், கடலூர்
ஆடிப்பட்டம் ஜூலை-ஆகஸ்ட் CO 1, TMV 3,TMV 7
திருவள்ளூர்
புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்- அக்டோபர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2
விழுப்புரம்
கார்த்திகைப்பட்டம் நவம்பர்- டிசம்பர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2
IV. வட மேற்கு மண்டலம் (இறவை)
நாமக்கல்
மார்கழிப்பட்டம் டிசம்பர்- ஜனவரி TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
சேலம், பெரம்பலூர், அரியலூர்
மாசிப்பட்டம் பிப்ரவரி- மார்ச் TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
வட மேற்கு மண்டலம் (மானாவாரி)
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி
ஆனிப்பட்டம் ஜூன்-ஜூலை CO 1, TMV 3,TMV 7
பெரம்பலூர், அரியலூர்
ஆடிப்பட்டம் ஜூலை-ஆகஸ்ட் CO 1, TMV 3,TMV 7
V. டெல்டா மண்டலம் (இறவை)
தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி
மாசிப்பட்டம் பிப்ரவரி- மார்ச் TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
திருவாரூர்
சித்திரைப்பட்டம் ஏப்ரல்- மே TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2
டெல்டா மண்டலம் (மானாவாரி)
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்
தைப்பட்டம் ஜனவரி- பிப்ரவரி VRI(SV) 1
திருச்சிராப்பள்ளி
புரட்டாசிப்பட்டம் செப்டம்பர்- அக்டோபர் CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2

எள் இரகங்கள்

பண்புகள் கோ 1 டி.எம்.வி 3 டி.எம்.வி 4 டி.எம்.வி 5
பெற்றோர் (டி.எம்.வி 3 x எஸ்.ஐ. 1878) ( எஸ்.ஐ 1878) தென் ஆற்காடு உள்ளூர் இரகம் x மலபார் சாத்தூர் உள்ளூர் இரகத்தில் இருந்து தனிவழித் தேர்வு வைகுண்டம் இரகத்தில் இருந்து தனிவழித்தேர்வு
வயது (நாள்) 85-90 80-85 85-90 80-85
எண்ணெய் சத்து 51 51 50 51
விளைச்சல் கிராம் / எக்டர்
இறவை 750-790 625-750 700-850
மானாவாரி 450-650 400-650 450-650
செடி அமைப்பு மையத்தண்டு நீண்ட கிளைகளையும், குறைந்த கணுவிடைப் பகுதிகளையும் கொண்டது. நன்கு கிளைத்த புதர் செடி போன்ற தோற்றத்தை உடையது. நன்கு கிளைத்த புதர் செடி போன்றது. நேரான, நடுத்தரமான கிளைகளைக் கொண்டது.
காய்கள் 4 அறைகள் 4 அறைகள் 4 அறைகள் 4 அறைகள்
விதைகள் கருப்பு கரும்பழுப்பு பழுப்பு பழுப்பு

பண்புகள் டி.எம்.வி 6 எஸ்.வி.பி.ஆர் 1 வி.ஆர்.ஐ (எஸ்.வி)1
பெற்றோர் ஆந்திரப் பிரதேச இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு மேற்கு மலைத் தொடர் வெள்ளை இரகத் தேர்வு திருக்காட்டுப்பள்ளி இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு
வயது (நாள்) 85-90 75-80 70-75
விளைச்சல் கி / ஹெ
இறவை
700-950 800 650-900
மானாவாரி 600 450-650
எண்ணெய் சத்து 54 53.8 51
செடி அமைப்பு நேரானது மற்றும் நடுத்தர கிளைகளை உடையது. நேரானது மற்றும் நடுத்தர கிளைகளை உடையது. நடுத்தர கிளைகளை உடையது.
காய்கள் 4 அறைகள் 4 அறைகள் 4 அறைகள்
விதைகள் பழுப்பு வெள்ளை பழுப்பு
பண்புகள் டி.எம்.வி 7
பெற்றோர் எஸ்.ஐ 250 X இ.எஸ் 22 லிருந்து பெறப்பட்டது.
வயது (நாள்) 80-85
மானாவாரி 850
இறவை 920
எண்ணெய் சத்து % 50
செடி அமைப்பு நேரானது மற்றும் நடுத்தர கிளைகளை உடையது.
காய்கள் 4 அறைகள்
விதைகள் பழுப்பு

நிலம்:

எள் சாகுபடியைப் பொறுத்தவரை மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் களிமண் போன்ற மண் வகைகள் ஏற்றவை.

 நிலம் தயாரித்தல்:

எள் சாகுபடியைப் பொறுத்தவரை நிலத்தை  இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழவு செய்திருக்க வேண்டும். சிறிய விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து தன்மைப்படுத்த வேண்டும். இதற்கு நிலத்தை நன்றாக உளவு செய்தாலே போதுமானது.

இறவை எள் சாகுபடி முறைக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் அளவைப் பொறுத்து 15 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்கவேண்டும். நீர் தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும்.

விதையளவு:

எள் சாகுபடி பொறுத்தவரை மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு 2 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதைத்தல்:

எள்சாகுபடியைப் பொறுத்தவரை 15 கிலோ மணல் அல்லது 20 கிலோ எருவுடன் எள் விதையைக் கலந்து விதைப்பது நல்லது.

அப்போதுதான் சரியான இடைவெளியில் விதைகள் விழுந்து முளைக்கும். வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியும் கொடுக்க வேண்டும். செடிகள் அளவுக்கு அதிகமாக இருந்தால் களைத்து விடலாம்.

நீர் மேலாண்மை:

எள் சாகுபடியைப் பொறுத்தவரை அதிகமாக தண்ணீர் தேவைப்படாது, செடியை வளரவிட்டு தண்ணீர் கட்டினால், இலை குறைந்து காய் அதிகம் காய்க்கும்.

ஒவ்வொரு முறை தண்ணீர் பாய்ச்சும்போதும் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை கலந்துவிட வேண்டும்.  எள்ளை விதை நேர்த்தி செய்து, ஜீவாமிர்தக் கரைசலையும் கொடுத்தால், எள்ளில் அதிகமாக தாக்குதல் நடத்தப்படும், மாவுப் பூச்சிகளின் தாக்குதல்கள் குறைந்துவிடும். அதன் பிறகு 40 முதல் 50 நாட்களில் பூ எடுக்க ஆரம்பிக்கும்.

உரங்கள்:

எள் சாகுபடியைப் பொறுத்தவரை இறவை மற்றும் மானாவாரி பயிருக்கு முழு அளவு தழை, சாம்பல் சத்து,மணி, உரங்களை அடி உரங்களாக இடவேண்டும். ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து (யூரியா 25 கிலோ), மணிச்சத்து (சூப்பர் பாஸ்பேட் 50 கிலோ) , சாம்பல் சத்து ( பொட்டாசியம் 6 கிலோ) என்ற அளவில் உரமிட வேண்டும்.

ஏக்கருக்கு 5 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 5 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை 15-20 கிலோ மணலுடன் கலந்து அடியுரமாக இடலாம். இவ்வாறு இடும்போது தழைச்சத்து கால்பங்கினை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஏக்கருக்கு 3 கிலோ மாங்கனீசு சல்பேட்டை 15-20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் தூவுவதன் மூலம் மாங்கனீசு பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய முடியும்.

களை நிர்வாகம்:

எள் சாகுபடியைப் பொறுத்தவரை, நடவு செய்த 10நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் முதல் களை எடுக்க வேண்டும். முதல் களை எடுத்ததில் இருந்து 10 நாட்கள் விட்டு அடுத்த களை எடுக்க வேண்டும்.

Related posts