மூலிகை பயிர்களுக்கான விவசாய மானியம்

Mooligai-Maniyangal

இப்பொழுது மக்களிடம் மூலிகை பொருட்கள் மீது அதிக வரவேற்பு உள்ளது. ஆனால் அதன் உற்பத்தியானது மிகவும் குறைவு. எனவே விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மூலிகைப் பயிர் வாரியமானது 57 தாவரங்களைப் பயிரிடுவதற்கு மானியம் வழங்கி வருகிறது. விவசாயிகள் அதனை பெற்று பயனடையலாம். சரி இங்கு மூலிகை பயிர்களுக்கான விவசாய மானியம் பற்றி படித்தறிவோம் வாங்க.

விவசாய மானியம்:

மூலிகை பயிர் வாரியமானது அரிதான மூலிகைகளை பயிரிடுவதற்கு 75% உற்பத்தி குறைந்து வரும் நீண்ட காலம் பயிர்களுக்கு 50% மற்ற மூலிகைகளுக்கு 20% மானியம் வழங்குகிறது.

தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையில் நன்கு வளரும் மூலிகைகள் மற்றும் அதனை 1 ஏக்கருக்கு சாகுபடி செய்ய மூலிகை துறை வாரியத்தால் பரிந்துரைக்கப்படுகிறது.

20% மானியம்:

வசம்பு, சோற்றுக்கற்றாழை, பேரத்தை, சித்திரத்தை, தண்ணீர் விட்டான் கிழங்கு, வேம்பு, நீர் பிரம்மி, சாரணத்தி, சென்னா அல்லது அவுரிம் நித்திய கல்யாணி, வல்லாரை, சங்குபுஸ்பம், கண்வலிக்கிழங்கு, வெட்டிவேர், நெல்லி, சிறுகுறிஞ்சான், நன்னாரி, பூனைக்காலி, துளசி, கீழாநெல்லி, திப்பிலி, செங்கொடிவேலி, மணத்தக்காளி, சீனித்துளசி, கடுக்காய், நொச்சி, அழுக்கிரா போன்ற மூலிகைக்கு 20% சதவீதம் விவசாய மானியம் வழங்கப்படுகிறது.

50% மானியம்:

வில்வம், வாகை, மாவிலங்கம், கொடிவேலி, வேங்கை, நஞ்சறுப்பான் போன்ற மூலிகை தவரங்களுக்கு 50% விவசாய மானியம் வழங்கப்படுகிறது.

75% மானியம்:

சந்தனம், சந்தன வேங்கை போன்றவற்றைக்கு 75% மானியம் வழங்கப்படுகிறது.

குறிப்புகள்:

நல்ல சந்தை வாய்ப்புள்ள மூலிகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும், மூலிகைக்கு ஏற்ப மூலிகை கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்வதினால் நல்ல லாபம் பெறலாம்.

மானியம் பெற அந்தந்தப்பகுதியில் உள்ள தோட்டக்கலை அலுவலரை தொடர்பு கொண்டு அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

Related posts