கொய்யா சாகுபடியில் அதிக லாபம் பெறுவது எப்படி?

கொய்யா சாகுபடி

கொய்யா சாகுபடி முறையில் புதிய வேளாண் தொழில்நுட்பம்:

நாட்டில் முக்கிய பழப்பயிர்களுள் ஒன்றுதான் கொய்யா, குறிப்பிட்ட ஏப்ரல் முதல் மே மாதங்கள் வரை கொய்யா சாகுபடி (guava cultivation) செய்கின்றனர். அதன்பிறகு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை கொய்யா சாகுபடி (guava cultivation) செய்கின்றனர். மழை பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்யா பழங்கள், மகசூல் அளவில் அதிகரித்து காணப்பட்டாலும் அவற்றின் தரம் குறைவாகக் காணப்படுகிறது.

இத்தகைய சூழலில் பழ சந்தையின் சந்தை தேவையை கருத்தில் கொண்டு கொய்யா உற்பத்தியைப் பெருக்க மேற்குவங்க கொய்யா விவசாயிகள் வேளாண் விஞ்ஞானிகள் பங்களிப்புடன் புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் வாயிலாக கொய்யா சாகுபடி (guava cultivation) முறையில் அதிகளவு லாபம் பெற்று வருகின்றனர். புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் குறித்து இந்தத் தொகுப்பில் நாம் படித்தறிவோம் வாருங்கள்.

நிலம்:

நல்ல மண் பாங்கான இடம், சீரான தட்பவெப்பநிலை உள்ள பகுதியில் சாகுபடியாகும் கொய்யா மிகுந்த சுவையுடன் இருக்கும். கொய்யாவுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை என்பதால், சாகுபடி பணியை குடும்பத்தினர் மட்டுமே மேற்கொள்ளலாம்.

இரகங்கள்:

கொய்யாவில் லக்னோ-49, பனாரஸ் ரகங்கள் சாகுபடிக்கு உகந்தவை. லக்னோ-49 ரகம் பச்சைக் காயாக விற்கவும், பனாரஸ் பழமாக விற்கவும் தகுந்தவை.

கொய்யா சாகுபடி தொழில் நுட்பம் முறையில் ஒரு மரத்தில் 50 கிலோ கொய்யா:

சராசரியாக ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 50 கிலோ காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ ரூ. 15-க்கு குறையாமல் விலைபோகும். சில நேரம், அதிகபட்சமாக ரூ. 60 வரை விற்பனையாகும். சராசரியாக கிலோவுக்கு ரூ. 20 என்ற விகிதத்தில் கிடைக்கும். ஒரு மரத்துக்கு ரூ. 250 வரை செலவாகும்.

வடிகால் வசதி:

வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் கொய்யா வளரும். மழைக்காலமான ஜூன்- ஜூலை மாதங்கள் நடவு செய்ய ஏற்றப் பருவம். செடிக்குச் செடி 8 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி என்ற அளவில் இடைவெளி விட்டு நடவேண்டும். 10 அடிக்கு 10 அடி இடைவெளி, 12 அடிக்கு 12 அடி என்ற இடைவெளியிலும் நடலாம். ஒரு ஏக்கரில் 300 மரங்கள் நடலாம்.

Related posts