தேசிய கால்நடை அபிவிருத்தித் திட்டம்

தேசிய கால்நடை அபிவிருத்தித் திட்டம்

தேசிய கால்நடை அபிவிருத்தித்திட்டம் 2014-2015 ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. கால்நடை அபிவிருத்தியின் அளவிலும், தரத்திலும் மேம்பாட்டை உறுதி செய்யவும், கால்நடை வளர்ப்போடு தொடர்புடைய அனைவரின் திறமைகளையும் படிப்படியாக உருவாக்கவும் இந்தத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கங்கள்
1) வளர்ப்புப் பறவைகள் உட்பட வீட்டு விலங்குகள் அனைத்தினுடைய நீடித்த வளர்ச்சியும் மேம்படும்.

2) தீவனப்பயிர்கள் பயிரிடப்படும் பரப்பை அதிகரிப்பது, தரமான தீவன விதைகள், தொழில்நுட்ப மேம்பாடு, விரிவாக்கம், அறுவடைக்குப் பிந்தைய நிர்வாகம், செய்முறைகள் ஆகியவற்றை வெவ்வேறுபட்ட வேளாண் தட்பவெப்பநிலைகளுக்கு உகந்தவகையில் அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் தேவைக்கும் கிடைப்பதற்குமுள்ள இடைவெளியைக் குறைப்பது.

3) தரமான தீவனங்களின் உற்பத்தியைத்தீவிரமாக்குவது. ஆற்றல்மிக்க விதை உற்பத்திச் சங்கிலி மூலம் தரமான தீவனவிதைகளின் உற்பத்தியைத் தீவிரப்படுத்துவது. விவசாயிகளின் தீவிரமான ஈடுபாட்டுடனும், விதைக் கழகங்கள், விவசாயிகளின் கூட்டுறவு அமைப்புகள், தனியார் முயற்சிகள், பால்பண்ணைகள் ஆகியவற்றின் உடனுழைப்புடனும் இவற்றை செய்தல்.

4) நீடித்த கால்நடை வளர்ச்சியில் உரிமை உடையவர்களின் ஒருங்குகூடல், ஒத்துழைப்பு ஆகியவற்றை நடைமுறையில் உள்ள திட்டங்களுக்குக் கிடைக்கும்படி செய்தல்.

5) விலங்கினங்களுக்கான ஊட்டச்சத்து, கால்நடை உற்பத்தி போன்ற அக்கறை காட்டப்பட வேண்டிய விஷயங்களில் முன்னுரிமை உடையை பகுதிகளில் பயன்படக்கூடிய ஆராய்ச்சிகளைப் போற்றி வளர்த்தல்.

6) விவசாயிகளுக்கு தரமான விரிவாக்க சேவைகளை அளிப்பதற்காக வலிமையான விரிவாக்க செயல்களின் மூலம் மாநில செயற்பாட்டாளர்கள், கால்நடை உரிமையாளர்களின் திறமைகளை மேம்படுத்துதல்.

7) உற்பத்திச் செலவைக்குறைப்பது, கால்நடை வளர்ப்பை அதிகரிப்பது ஆசிகயவற்றிற்கு உதவக்கூடிய பொருத்தமான தொழில்நுட்பங்கள் பற்றிய சிறந்த பயிற்சிகளையும் ஊக்குவித்தல்.

8) உள்ளூர் இனங்களைச் சேர்ந்த கால்நடைகளின் மரபு மேம்பாட்டிற்கும் பாதுகாப்புக்குமான முன் முயற்சிகளுக்கு விவசாயிகள் / விவசாயிகளின் குழுக்கள் / கூட்டுறவு அமைப்புகள் ஆகியவற்றின் துணையோடு ஊக்கம் தருவது.

9) விவசாயிகளின் குழுக்கள், கூட்டுறவு அமைப்புகள், சிறு மற்றும் குறு விவசாயிகளின் கால்நடை உற்பத்திக் குழுக்கள், கால்நடை உரிமையாளர் குழுக்கள் ஆகியவற்றை அமைப்பதற்கு ஊக்கம் அளித்தல்.

10) கால்நடைகள் தொர்பான புதுமையான முன்னோடித் திட்டங்களை ஊக்குவித்தல், வெற்றிகரமான திட்டங்களை அனைவரும் பின்பற்றும்படி செய்தல்.

11) சந்தைப்படுத்துவதற்கு வழிசெய்து தருவது, உற்பத்தி வழிமுறை மதிப்புக்கூட்டுதல் ஆகியவற்றை விவசாயிகளுடன் இணைத்தல்.

12) கால்நடைக் காப்பீடு போன்ற ஆபத்தை சமாளிக்கும் வழிமுறைகளை ஊக்குவித்தல்.

13) கால்நடைகளுக்கு நோய் வராமல் தவிர்ப்பது, நோயைக் கட்டுப்படுத்துவது, சுற்றுச்சூழல் மாசுபாடுகளைக் குறைப்பது, உணவுப் பாதுகாப்புத்தரம் ஆகியவற்றை நோக்கிய முயற்சிகளுக்கு ஊக்கம் தருவது, கால்நடைகளின் இறந்த உடல்களை சரியான நேரத்தில் அப்புறப்படுத்தி தரமான தோல்களைப் பெறுவதை ஊக்குவிப்பது.

14) கால்நடை வளர்ப்பில் நீடித்து நிலவக்கூடிய அனுபவப் பாடங்களை மக்கள் குழுக்களின் பங்கேற்போடு பகிர்தல், கலப்பினப் பாதுகாப்பு, வள ஆதாரப் பதிவுகளை உருவாக்குவது ஆகியவற்றில் மக்களை ஈடுபடுத்துதல்.

திட்டத்தின் வடிவமைப்பு
கால்நடை வளர்ப்போடு தொடர்புடைய அனைவரின் திறன் உருவாக்கம், தரத்திலும் எண்ணிக்கையிலும் கால்நடை உற்பத்தி சிறப்பதற்கு தேவையான செயல்பாடுகள் ஆகியவற்றை இந்தத்திட்டம் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இத்தகைய முன்முயற்சிகள் மற்ற எந்தவகை நிதி உதவியையும் மத்திய அரசிடமிருந்து பெற்றிருக்கக் கூடாது என்பது நிபந்தனை.

இந்தத்திட்டம் பின்வரும் நான்கு துணைத்திட்டங்களாக ஒழுங்கமைப்பட்டுள்ளது.

1) கால்நடை மேம்பாட்டுக்கான துணைத்திட்டம் : ஆடு, மாடு, எருமைகள் தவிர, பிறவகை கால்நடைகளையும், வளர்ப்புப் பறவைகளையும் உள்ளடக்கியது இந்தத் துணைத் திட்டம். இவைகளின் ஒட்டுமொத்த மேம்பாடு தொடர்பான செயல்பாடுகளில் தனது முழுமையான அணுகுமுறையின் மூலம் அக்கறை செலுத்துகிறது. ஆயினும், இந்தத் துணைத் திட்டத்திலுள்ள ஆபத்தை சமாளிக்கும் திட்டம்பற்றிய பகுதி மட்டும், மற்ற கால்நடைகளோடு ஆடு, மாடு, எருமைகளையும் உள்ளடக்கிக் கொள்கிறது.

2) வடகிழக்குப் பிராந்தியத்தில் பன்றி வளர்ப்புக்கான துணைத்திட்டம் : இந்தப்பகுதியில் பன்றி வளர்ப்புக்குத் தேவைப்படும் பொருத்தமான தலையீடுகள் மூலம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பை ஒன்றிணைக்கப் பாடுபட்டு பன்றிவளர்ப்பில் மரபு மேம்பாடு, ஆரோக்கிய மேம்பாடு, அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகள் ஆகியவை உட்பட அனைத்திலும் கவனம் செலுத்தும்.

3) தீவனம் உண்பித்தல் மேம்பாடு துணைத்திட்டம் : விலங்கினங்களின் உணவு, பசுந்தட்டை வைக்கோல் போன்ற கால்நடை உணவு ஆதாரங்களை நீடித்துப் பெறுவதில் நிலவக்கூடிய பற்றாக்குறை பிரச்சனைகளில் இந்தத் துணைத்திட்டம் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. கால்நடை மேம்பாட்டிற்கு உத்வேகமளித்து அவற்றின் ஏற்றுமதி வளத்தை மேம்படுத்தி போட்டி போடக்கூடிய ஒரு நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு இந்தத் துணைத்திட்டம் கவனம் செலுத்துகிறது. வெவ்வேறு வேளாண்-பருவநிலைப் பகுதிகளில் விவசாய நிலங்களின் மீதும், விவசாயமல்லாத நிலங்கள் மீதும் மிகவும் பொருத்தமான மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்கச் செய்வதன் மூலம் தீவன உற்பத்தியின் மீது இந்தத் துணைத் திட்டம் கவனம் செலுத்தும்.

4) திறன் மேம்பாடு, தொழிநுட்ப மாற்றுகளின் விரிவாக்கம் : தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்து பின்பற்றவும், அவற்றை ஏற்கவும் செய்வதற்கு ஒரு தளத்தை இது அமைத்துத் தரும். விவாசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், விரிவாக்கப் பணியாளர்கள் ஒத்துழைப்புடன் முன்னணி செயல்முறைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இந்தத் துணைத்திட்டம் ஈடுபடும்.

மேலும் தகவலுக்கு : http://www.dahd.nic.in

Related posts