தீவன உற்பத்தி மேம்படுத்தும் திட்டம்

தீவன உற்பத்தி மேம்படுத்தும் திட்டம்

தீவன உற்பத்தி மேலாண்மை

மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் ஒரு மத்திய அரசின் நிதி உதவி பெறும் தீவன உற்பத்தி மேலாண்மை திட்டத்தினை மாநிலங்களில் தீவன உற்பத்தி அதிகரிப்பதற்காக அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 2005-06 ஆம் ஆண்டு முதலே கீழ்க்கண்ட நான்கு பகுதிகளாக அமல்படுத்தப்பட்டு வருகிறது

  • தீவனக்கட்டிகள் உற்பத்தி செய்யும் மையங்களை அமைத்தல்
  • புல்வெளிகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்
  • தீவன விதை உற்பத்தி மற்றும் விநியோகம்
  • உயிர்த்தொழில் நுட்பத்துடன் கூடிய ஆராய்ச்சித்திட்டங்கள்

இந்த மத்திய அரசின் நிதியுதவி பெறும் தீவன மேம்பாட்டுத்திட்டம், இருக்கக்கூடிய தீவனங்களை முறையாக உபயோகித்தலுக்காக 2010 ஆண்டிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.141.10 கோடி நிதியுதவியுடன் இத்திட்டம் கீழ்க்கண்ட புதிய அம்சங்களை அல்லது புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியுள்ளது.

  • தீவன பரிசோதனைக்கூடங்களை மேம்படுத்துதல்
  • தீவன வைக்கோல் வெட்டும் இயந்திரங்களை அறிமுகம் செய்தல்
  • ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் மையங்களை நிறுவுதல்
  • அசோலா உற்பத்தி மற்றும் அறுவடையினை விளக்குதல்
  • பை-பாஸ் புரத உற்பத்தி மையங்களை நிறுவுதல்
  • அந்தந்த பகுதிகளுக்கேற்ற தாது உப்புக்கலவை அல்லது தீவனக்கட்டிகள அல்லது தீவன உற்பத்தி மையங்களை உருவாக்குதல்

ஏற்கனவே காணப்படும் செயல்பாடுகளுக்கான மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவன கட்டி செய்யும் மையங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தினை 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், புல்வெளிகள் மேம்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படும் நிலத்தின் அளவினை 5-10 ஹெக்டேராக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

திட்ட அம்சங்கள்

கீழ்கண்ட அம்சங்கள், நிதி அளிக்கும் முறை, ஒரு யூனிட் விலை, திட்ட குறிக்கோள்கள் 

மாற்றியமைக்கப்பட்ட அம்சங்கள அல்லது புதிய அம்சங்கள்பயனாளிகள்நிதியுதவி அளிக்கும் முறையூனிட் விலை (ரூ. லட்சங்களில்)
தீவனக்கட்டி தயாரிக்கும் மையங்களை நிறுவுதல்.பொது அல்லது தனியார் தொழில் முனைவோர் அதாவது கூட்டுறவு மற்றும் சுய உதவிக்குழுக்களை உள்ளடக்கியது.50:5085.00
புல்வெளிகளை மேம்படுத்துதல்பஞ்சாயத்து நிலங்களிலும் இதர பொது இடங்களிலும் புல்வெளிகள் உருவாக்க விவசாயிகள், கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறை, தொண்டு நிறுவனங்கள், கிராம பஞ்சாயத்துகள் போன்றவை .100:000.70
தீவனப்பயிர் விதைகளை வாங்குதல் மற்றும் விநியோகித்தல்..விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். மாநில அரசுகள், பால் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தி இத்திட்டத்தினை செயல்படுத்துதல். ஒரு குவிண்டாலுக்கு ரூ.5000 என்ற விகிதத்தில் ஒரு மாநில அரசு மொத்தமாக 37000 குவிண்டால்கள் தீவன விதையினை வாங்கி விவசாயிகளுக்கு விநியோகிக்கும்.75:250.05
தீவன பரிசோதனைக்கூடங்களை மேம்படுத்துதல்.கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களிலுள்ள தீவன பரிசோதிக்கும் ஆய்வங்களில் தீவனத்தினை பரிசோதிப்பதற்கு இயந்திரங்கள் வாங்குவதல். வாங்க அனுமதிக்கப்படும் அங்கீகரிக்கப்பட இயந்திரங்களின் அட்டவணை சுற்றுக்கு அனுப்பப்படும்.50:50200.00
கையால் இயக்கும் புல்நறுக்கும் இயந்திரத்தினை அறிமுகம் செய்தல்.விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களின் அங்கத்தினர், ஆத்மா மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள்75:250.05
மின்சாரத்தினால் இயங்கும் புல்நறுக்கும் இயந்திரத்தினை அறிமுகம் செய்தல்.விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களின் அங்கத்தினர், ஆத்மா மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள்75:250.20
ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் மையங்களை நிறுவுதல்.விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களின் அங்கத்தினர், ஆத்மா மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள்100:001.05
அசோலா பயிரிடுதல் மற்றும் உற்பத்தியினைப் பற்றி செயல்விளக்கமளித்தல்விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களின் அங்கத்தினர், ஆத்மா மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள்50:500.10
பை-பாஸ் புரத உற்பத்தி மையங்களை நிறுவுதல்.பால் கூட்டுறவு அமைப்புகள், தனியார் தொழில் முனைவோர் (ஒரு வணிக வங்கியிடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்).25:75145.00
ஒவ்வொரு இடத்திற்கேற்ப தாது உப்பு கலவை அல்லது குச்சித்தீவனம் அல்லது தீவன உற்பத்தி ஆலைகளை நிறுவுதல்.பொது மற்றும் தனியார் தொழில்முனைவோர் அதாவது பால் கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள் (திட்டத்தின் இலாபம் ஈட்டும் தன்மை பற்றி ஒரு வணிகரீதியாக செயல்படும் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் இருப்பின்) நிதியுதவி இதற்கான இயந்திரங்கள் வாங்குவதற்கு மட்டும் வழங்கப்படும்25:75100.00

யார் விண்ணப்பிக்கலாம்?
இதில் பயன்பெற விரும்புவோர் கறவைப் பசுக்களையும், சொந்தமாக அல்லது குத்தகையாக 25 சென்ட் நிலமும், 3 ஆண்டுகளுக்கு சாகுபடி செய்யக் கூடியவராகவும் இருப்பது அவசியம் ஆகும்.

Related posts