வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு | Increase in cylinder price for commercial use

சென்னை: வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.1,942-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரின் விலை தற்போது ரூ.1968.50 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த நவம்பர் 1-ம் தேதி, வர்த்தக சிலிண்டர் விலை ரூ.101 உயர்த்தப்பட்டு ரூ.1,999-க்கு விற்பனையானது. பின்னர், 16-ம் தேதி ரூ.57 விலை குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.




Source link

Related posts

Leave a Comment