நன்றியுடன் சேவையை நிறுத்துகிறது சென்னை 5 ஸ்டார் ஹோட்டல் | Chennai 5 star hotel is discontinuing service with gratitude

சென்னை: சென்னையின் பிரபலமான 5 நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான கிரவுன் பிளாசா மூடுவிழா காண்கிறது. வரும் டிசம்பர் 20-ம் தேதியுடன் ஹோட்டல் மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஹோட்டலை கட்டுமான நிறுவனமான பாஷ்யம் வாங்குவதாகவும், ஹோட்டலை இடித்துவிட்டு அந்த இடத்தில் உயர்தர அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

​“கிரவுன் பிளாசா ஹோட்டல் டிசம்பர் 20-ம் தேதியுடன் வாடிக்கையாளர்களுக்கு தனது சேவையை நிறுத்திக் கொள்வதை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறோம். டிச.20-ம் தேதி வரையில், வாடிக்கையாளர்களுக்கான சேவை வழங்கப்படும். கடந்த 38 ஆண்டுகளாக இந்த ஹோட்டல் வாடிக்கையாளர்கள் சிறப்பான சேவை வழங்கி வந்துள்ளது. இந்தத் தருணத்தில் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எங்கள்நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிரவுன் பிளாசா ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் அமைந்துள்ளது. 8 அடுக்கு கொண்ட இந்த ஹோட்டலில் மொத்த 283 அறைகள் உள்ளன. ஒரு நாள் வாடகை ரூ.10 ஆயிரம் முதல் வசூலிக்கப்படுகிறது.

38 ஆண்டு பழமையான இந்தஹோட்டல் தொழிலதிபர் டிடி வாசுவால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் அடையார் கேட் ஹோட்டல் என்றுஇது அழைக்கப்பட்டது. ஹோட்டல்திறக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, ஜவுளி ஏற்றுமதியில் ஈடுபட்டுவந்த கோயல் குடும்பத்தினர் இந்த ஹோட்டலை வாங்கினர்.

பின்னர் இந்த ஹோட்டல் பார்க்ஷெரட்டன் அண்ட் அடையார் டவர்ஸ் என்று பெயர் மாற்றம் பெற்றது. 2015-ம் ஆண்டு இந்த ஹோட்டல் கிரவுன் பிளாசா என்று பெயர் மாற்றம் பெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமான நிறுவனமான ஸீப்ரோஸ், இந்த ஹோட்டலை வாங்கும் முயற்சியில் இறங்கியது. ஆனால், ஒப்பந்தம் நிறைவேறவில்லை.

இந்நிலையில், பாஷ்யம் நிறுவனம் இந்த ஹோட்டலை வாங்க உள்ளது. இதனால், வரும் டிசம்பர் 20-ம் தேதியுடன் இந்த ஹோட்டல் மூடுவிழா காண்கிறது.

இந்த ஹோட்டலை வாங்கும்பாஷ்யம் குழுமம், இங்கு 5,000முதல் 7,000 சதுர அடியில் 130 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட இரட்டைக் கோபுரங்களைக் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், இந்த அப்பார்ட்மெண்ட்களின் விலை ஒரு சதுர அடிக்கு ரூ50,000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு அப்பார்ட்மெண்ட் விலை ரூ.15 கோடி முதல் ரூ.21 கோடிவரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source link

Related posts

Leave a Comment