நகைக் கடைகளின் சேதாரம், செய்கூலி சரியானதுதானா? – நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. கேள்வி | cost of buying jewelry at jewelry stores correct ravikumar mp Question

புதுடெல்லி: நகைக்கடைகளில் வாங்கப்படும் சேதாரம், செய்கூலி என்பது சரியானது தானா என டி.ரவிக்குமார் எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் மக்களவையில் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ரவிகுமார் கேள்வி எழுப்பினார். மிகவும் முக்கியமானக் கேள்வியாக இதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பதில் வழங்கப்பட்டுள்ளது. தனது கேள்வியில் எம்பி ரவிகுமார் கேட்கும்போது, “நகைக்கடைகளில் நுகர்வோரிடம் வாங்கப்படும் சேதாரம், செய்கூலி ஆகியவை உண்மைக்கு மாறாகத் தெரிவிக்கப்படுவது அரசுக்குத் தெரியுமா? நகை செய்யும்போது ஏற்படுவதாக நகைக்கடை உரிமையாளர்கள் சொல்வது உண்மையான சேதாரம்தானா? அவர்கள் நகைத் தொழிலாளர்களுக்குத் தந்ததாகச் சொல்லி பொதுமக்களிடம் வசூலிக்கும் செய்கூலி என்பது உண்மையாக அவர்கள் கொடுத்த கூலியா? இதில் உள்ள முரண்பாடுகளைக் களைய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சவுத்ரி அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: “அத்தகைய புகார் எதுவும் அரசுக்கு வரவில்லை; எடைபோடும் எந்திரங்கள் மாநில அரசுகளின் ‘Legal Metrology’ துறையைச் சேர்ந்த அதிகாரிகளால் ஒவ்வொரு ஆண்டும் பரிசோதிக்கப்படுகின்றன. தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகிய நகைகள் ஏற்றுமதியில் செய்கூலி, சேதாரங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இது, இந்திய ஏற்றுமதி வெளிநாடுகளுக்கான கையேடு 2023-லும் குறிப்பிடப்பட்டுள்ளன” என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Source link

Related posts

Leave a Comment