தங்கம் விலை அதிரடி உயர்வு: வரலாற்றில் முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டியது | Gold price surges – crosses Rs 48 thousand for first time in history

சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்துவந்த தங்கத்தின் விலை இன்று (மார்ச் 5) ஒரேநாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டி தங்கம் விற்பனை ஆகிறது.

கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,440-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 என்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டி தங்கம் விற்பனை ஆகிறது. இன்று தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூ.48,120 என்ற மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.50,000-ஐ கடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசுஅதிகரித்து 78 ரூபாய் 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,200-க்கு விற்பனையாகிறது.
Source link

Related posts

Leave a Comment