இந்தியாவின் முதலீட்டு சூழல் குறித்து நம்பிக்கை தெரிவித்த அமெரிக்கவாழ் இந்திய தொழிலதிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு | pm Modi praises American based Indian businessmen confidence investment in India

புதுடெல்லி: இந்தியாவின் முதலீட்டு சூழல் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருப்பதாக கருத்து தெரிவித்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர் பாலாஜி எஸ்.ஸ்ரீநிவாசனுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சிலிக்கான்பள்ளத் தாக்கின் முக்கிய முதலீட்டாளர் மற்றும் தொழில்முனைவோராக திகழ்பவர் ஸ்ரீநிவாசன். இவர்முன்பு கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் காயின்பேஸின் தலைமைதொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றியவர். தற்போது இவர் பலநிறுவனங்களை கையகப்படுத்தி அவற்றின் இணை நிறுவனராக உள்ளார்.

இவர் அண்மையில், “இந்தியா வின் வளர்ச்சி திறனை உலகம் இன்று உற்று நோக்குகிறது. வலிமையான மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியா உலகுக்கு நல்லது’’ என்று தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த கருத்து உலக முதலீட்டாளர்களிடையே இந்திய சந்தையின் முதலீடு, வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமைந்தது.

இந்த நிலையில், ஸ்ரீநிவாசனின் இந்த கருத்துக்கு பிரதமர் மோடி பாரட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் எக்ஸ்வலைதளத்தில், “அமெரிக்கதொழில் முனைவோரின் இந்தகருத்து இந்தியாவின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் செயல்படுவேன். புத்தாக்கம் என்று வரும்போது உலக முதலீட்டாளர்களை எங்கள்தேசத்தில் முதலீடு செய்ய வரவேற்கிறோம். இந்தியா ஏமாற்றாது’’ என்று தெரிவித்துள்ளார்.
Source link

Related posts

Leave a Comment