2020 புத்தாண்டு ராசி பலன்கள் – கும்பம்

கும்பம்

இந்த ஆண்டு, சகிப்புத்தன்மையையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் தரும்.

ராசிநாதன் சனி பகவான் லாப வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் புதிய பொறுப்பும் பதவியும் தேடி வரும்.

உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறந்திருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவரின் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். வங்கியில் அடமானமாக வைத்திருந்ததை மீட்பீர்கள்.

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். திடீர் யோகம், பணவரவு, அந்தஸ்து வரும். பங்குச் சந்தை மூலம் லாபம் கிடைக்கும்.

பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே சென்று திருத்துவது நல்லது. உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். 

வியாபாரத்தில் தள்ளுபடி விற்பனையால் லாபம் கூடும். கடையை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். 

உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்களிடம் எல்லா ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

Related posts