2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

நிறைய பேருக்கு வேலையில் பிரச்சினை மன அழுத்தம் என இருந்தது. இனி அந்த கவலைகள் தீரப்போகிறது.

உங்க கர்ம ஸ்தானத்தில் சனி, குரு, கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

ஜனவரி மாதத்தில் சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பு. உங்களுக்கு தசாபுத்திகள் நன்றாக இருந்து சுய ஜாதகமும் நன்றாக இருந்தால் நீங்கள் யோகக்காரர்.

2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மீனம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது .

புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான்ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு திருக்கணிதப்படி சனி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் மீனம் ராசி காரர்களுக்கு என்ன நன்மைகள் நடக்கும் என்று பார்க்கலாம்.

ஹம்ச யோகம்

மீனம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு சந்தோஷ செய்திகள் அதிகம் தேடி வரும்.

சனி லாப ஸ்தானம், குரு பத்தில் சஞ்சரிக்கிறார். ஹம்ச யோகம். ராசிநாதன் குரு பலமடைகிறார். வெளிநாடு செல்லவும், அரசு வேலை முயற்சி செய்பவர்களுக்கும் நன்மைகள் நடைபெறும். லாப ஸ்தானத்தில் சனி இருப்பது நல்லது. அரசு வேலைக்கு தேர்வு எழுதலாம் வெற்றி பெற்று நல்ல வேலையில் அமர்வீர்கள்.

வளர்ச்சி அதிகரிக்கும்

வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். திருமணம் செய்ய வேண்டும் என்ற இளைஞர்கள், இளம் பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.

நான்காம் வீட்டில் உள்ள ராகுவிற்கு குரு பார்வையும் கிடைக்கிறது. இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி. 11ஆம் வீட்டில் சனி இருக்கிறது பணம் வரும் தன்னம்பிக்கை கொடுக்கும். 2020ஆம் ஆண்டில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும், அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக
அமையப்போகிறது.

ஆரோக்கியத்தில் அக்கறை

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் நோயில் இருந்து நிவர்த்தி கிடைக்கும் கால்வலி பிரச்சினைகள் தீரும். கடன் பட்டு கவலைப்பட்டவர்களுக்கு இந்த ஆண்டு கடன்கள் அடையும், பணம் சேமிக்கலாம்.

வெளிநாடு செல்லும் யோகம் வரும். நல்ல வேலை கிடைக்கும். மீனம் ராசிக்காரர்கள் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

புதிய வேலை கிடைக்கும்

நிறைய பேருக்கு வேலையில் பிரச்சினை மன அழுத்தம் என இருந்தது. இனி அந்த கவலைகள் தீரப்போகிறது.

வேலையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சமூகத்தில் உயர்ந்த பதவி அந்தஸ்து கிடைக்கும். பெண்களுக்கு புதிய பிசினஸ் அமையும். உடைகள் விற்பனை செய்யலாம். வீட்டில் மதிப்பு மரியாதை கூடும்.

உங்க கர்ம ஸ்தானத்தில் சனி, குரு, கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஜனவரி மாதத்தில் சனி லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பு. மிகச்சிறந்த மேன்மைகள் கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலம்

உங்களுடைய குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். திருமண முயற்சிகள் கை கூடும் நல்ல வரன் அமையும். பெண்களுக்கு மனதிற்கு பிடித்த கணவர் அமைவார்.

மூத்த சகோதரர்கள் இடையே இருந்த பிரச்சினைகள் தீரும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதியில் லாபம் கிடைக்கும்.

கணவன் மனைவி உறவில் இருந்த உரசல்கள் நீங்கும். குடும்ப உறவில் குதூகலமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு உயர்பதவி, அதிகார பதவி தேடி வரும்.

மாணவர்களுக்கு யோகம்

மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் நீங்கும் டிகிரி படிப்பவர்களுக்கு அரியர்கள் கிளியர் செய்வீங்க.

ஆட்சி பணித்துறை தேர்வு எழுதலாம். உயர்பதவி தேர்வுகள் எழுதலாம். மொத்தத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான வருஷம் ரொம்ப உற்சாகமாக வலம் வருவீங்க.

Related posts