ஹைக்கூ கவிதைகள்

Haiku

உதிரும் வலி… விடுபடும் வரை!

பயமின்றி பிணைக்கப்பட்ட பந்தம் … பலமிழப்பதில்லை!!!

சுற்றமும் சூழ்ந்திருந்தாலும்…என் நினைவுகள் உன்னைச் சுற்றியே!!!

விருப்பத்தின் ஆரம்பம்… மறுத்தலின் முடிவு!

புரட்டிப் போட்டது புத்தகம் மட்டுமல்ல… நின் நினைவுகளும்!

தேநீரின் தித்திப்பு போல.. தெவிட்டாத நின் நினைவுகள்!

என் ஒவ்வொரு துளி நினைவிலும்… வீழ்ந்து நிரம்பும் தீரா பிம்பம் நீ!

சரி செய்தாலும், சில வடுக்களின் ரணங்கள் மறைவதில்லை!

அழையா விருந்தாளியாய்… அவ்வப்போது சில நினைவுகள்!!!

தொலைத்தலும், தொலைதலுமே வாழ்க்கை!!

திரியைப் பற்ற வைத்தாலும்… வெடிக்கு வேதனையில்லை!!!

காற்றுக்கும் திசையுண்டு என்பதை… நின் விழிமொழியால் கண்டுகொண்டேன்!

ஒரு காய்ந்து போன மரத்திலிருந்து கடைசியாக விடைபெறும் பறவை போலத்தான், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் நிலைமையும்!

கேள்விகள், பதிலுக்காக எப்பொழுதும் காத்திருப்பதில்லை!

மொழியில்லா நின் விழிப்பார்வையை, மொழிபெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பம்…காதல்!!!

விடையறியா என் கேள்விகளுக்கு நின் பதில்… மௌனம்!

சங்கமிக்குமிடத்தில் தன் அடையாளத்தையிழக்கிறது… நதி!

உரையாடல் தீர்ந்தாலும், ஓயாமல் பேசும் நின் மௌனங்கள் !

மௌனத் தீவுக்குள் நுழைந்த நதி அலையாய், நீங்கா நின் நினைவுகள்!

நானென்ற நானில்லை…என்னில் நீயென்ற நானில்லாமல்!

தொலைத்த மகிழ்ச்சியின் சாயல், வெற்றுப் புன்னகையில் வெளிப்படுவதில்லை!

விழிகளால் வினாக்களை விடுக்கிறாய்… விடைகாணும் ஆவலில் நான்!!!