இந்திய நாணயங்கள் அன்று முதல் இன்று வரை

Indian Currencies

இந்தத் தொகுப்பில் இந்திய நாணயங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

இந்திய ரூபாய் நாணயங்கள் (Coins of the Indian rupee) 1950 முதல் அச்சிடப்பட்டுவருகின்றன. அதன் பிறகு ஆண்டுதோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன. அவை இந்திய நாணய முறையின் மதிப்பு வாய்ந்த அம்சமாக உள்ளன. செல்லாக் காசாக்கப்பட்ட நாணயங்களைத் தவிர 50 பைசா (அதாவது 50 பைசா அல்லது ₹0.50), ₹1, ₹2, ₹5, ₹10. ஆகிய அனைத்து நாணயங்களும் தற்போது பழக்கத்தில் உள்ளன. இவை அனைத்தும் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் அமைந்துள்ள நான்கு காசாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.

வரலாறு

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் பிரித்தானிய அரசின் நாணய அமைப்பும் நாணயங்களும் இந்தியா குடியரசான 1950 ஆம் ஆண்டுவரை தக்கவைத்துக் கொள்ளப்பட்டன. இந்திய குடியரசு முதலில் ரூபாய் நாணயங்களை 1950 இல் வெளியிட்டது. பிற துணை அலகு நாணயங்களான 1/2 ரூபாய், 1/4 ரூபாய், 2 அணா, 1 அணா, 1/2 அணா & 1 தம்பிடி நாணயங்களும் தயாரிக்கப்பட்டன. ஒரு ரூபாயானது 16 அணாக்கள் அல்லது 64 தம்பிடிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு அணா, 4 தம்பிடிகளுக்கு இணையாக இருந்தது.

1957 இல், இந்தியா தசம முறையிலான நாணய முறைக்கு மாறியதென்றாலும் கொஞ்ச காலத்துக்கு இருவகையான நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன. பழைய மற்றும் புதிய பைசா நாணயங்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை அறிய வசதியாக, 1957 முதல் 1964 வரை உருவாக்கப்பட்ட நாணயங்கள் “நயா பைசா” (“new” paisa) என்ற பெயரைக் கொண்டிருந்தன. புதியதாக புழக்கத்தில் விடப்பட்ட நாணயங்களாக 1, 2, 3, 5, 10, 20, 25, 50 (நயா) பைசா மற்றும் ஒரு ரூபாய் ஆகியன இருந்தன. இதில் ஒரு ரூபாய் நாணயம் மட்டும் தசமமுறைக்கு மாறியதற்கு முன் இருந்த மதிப்பிலேயே இருந்த நாணயமாகும். அதேபோல தசமமுறைக்கு மாறுவதற்கு முன் வழக்கில் இருந்த அரை ரூபாய், கால் ருபாய் நாணயங்களும் புழக்கத்தில் நீடித்தன.

1964 இல் “நயா” என்ற சொல் கைவிடப்பட்டது. இந்த ஆண்டில் ஒரு புதிய வகுப்பாக 3 பைசா அறிமுகப்படுத்தப்பட்டது, 1968 ஆம் ஆண்டு 20 பைசா நாணயம் அச்சிடப்பட்டது. ஆனால் இந்த இரு நாணயங்களும் அவ்வளவாக பிரபலமடையவில்லை. 1, 2. 3 பைசா நாணயங்கள் 1970களில் படிப்படியாக புழக்கத்திலிருந்துவெளியேறின.1982 ஆம் ஆண்டு இரண்டு ரூபாய் நோட்டுக்கு பதிலாக இரண்டு ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டன. என்றாலும் இரண்டு ரூபாய் நாணயமானது 1990 வரை மீண்டும் அச்சிடப்படவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இரண்டுரூபாய் நாணயங்கள் அச்சிடப்பட்டன.

10, 25 மற்றும் 50 பைசா மதிப்பிலான துருவேறா எஃகு நாணயங்கள் 1988 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன, 1992 இல் புதிய ரூபாய் நாணயம் தயாரிக்கப்பட்டது. இந்த நாணயங்கள் பழைய ரூபாய் நாணயங்களைவிட சிறியதாகவும், இலகுவானதாகவும் துருவேறா எஃகினால் செய்யப்பட்டிருந்தது. 1992 இல் 5 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 இல் 10 ரூபாய் நாணயம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில்லறை தட்டுப்பாடு மற்றும் 2, 5, 10 ரூபாய் பணத்தாள்களை அச்சிட ஆகும் மிகுதியான செலவின் காரணமாக இந்த உயர் மதிப்பு நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2011 ஆம் ஆண்டு சூன் 30 ஆம் நாள் 25 பைசா மற்றும் அதைவிட மதிப்பு குறைந்த அனைத்து நாணயங்களும் உத்தியோகபூர்வமாக செல்லாதவை ஆக்கப்பட்டன. சிறப்பு நிகழ்வுகள் அல்லது நபர்களின் நினைவக சிறப்பு நாளைக் குறிக்கும் விதமாக பிற சிறப்பு நாணயங்களானது பல ஆண்டுகளாக அச்சிடப்பட்டன, அவை நினைவு நாணையங்களாக குறிப்பிடப்படுகின்றன. நினைவு நாணயங்கள் நாணய சேகரிப்பாளர்களின் சேகரிப்புக்கும், புழக்கத்திற்கும் பயன்படுத்தப்படுவதாக இருந்தன. அவை பல்வேறு நாணய அலகுகளில் வெளியிடப்பட்டன. சில நினைவு நாணயங்கள் பின்வருமாறு மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, அம்பேத்கர், ராஜீவ் காந்தி, ஞானேஷ்வர், 1982–ஆசிய விளையாட்டுப் போட்டிகள், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ், அரவிந்தர், சித்தரஞ்சன் தாஸ், சத்ரபதி சிவாஜி மற்றும் 2010-பொதுநலவாய விளையாட்டுக்கள், சின்னம், பகத்சிங், இரவீந்திரநாத் தாகூர் போன்ற நினைவு நாணயங்கள் அச்சிடப்பட்டன.

நாணயத் தொடர்: 1947-1950 (தசமமுறைக்கு-முன்)

இந்திய ஒன்றியம் 1947–1950

947 ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரம் பெற்றபோது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என பிரித்தானிய இந்தியா பிரிந்து புதிய பிரிட்டிஷ் டொமினியங்களாக உருவாயின. புதியதாக உருவான இந்திய டொமினியன் (அல்லது ஒன்றியம்) பிரித்தானிய அரசின் நாணய அமைப்பு மற்றும் நாணயங்களை தக்கவைத்துக் கொண்டது. இந்திய ரூபாயானது அடிப்படை அலகாக இருந்தது அது அணாக்களாகவும் (1 ரூபாய்= 16 அணா), பைசாக்களாகவும் (1 ரூபாய் = 64 பைசா) பிரிக்கப்பட்டிருந்தது.இந்திய நாணயங்களில், அரை-பைசா (128 அரை பைசாக்கள் = 1 ரூபாய்) மற்றும் தம்பிடி (192 தம்பிடி = 1 ரூபாய்) ஆகியவை 1947 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக செல்லாமல் ஆக்கப்பட்டன. என்றாலும் இந்த இருவகை நாணயங்களும் சிலகாலம் புழங்கியே வந்தது. 1966 வரை ரூபாயின் மதிப்பு 1s.6d (1 ஷில்லிங்கும் 6 பென்னிகளும்) அல்லது 18 பிரிட்டனின் பழைய பென்னிகள்; அரை-பைசாவானது 0.141 பழைய பென்னிகள் மற்றும் ஒரு தம்பிடி 0.09 பழைய பென்னி) என்று இருந்தது.

1947 ஆகத்து 15 முதல் 1950 சனவரி வரை, இருந்த இந்திய நாணய அமைப்பு பின்வருமாறு: (தடித்த – பிரிவுகள் நாணயங்கள்)

ருபாய் மற்றும் அதன் பின்னங்ங்கள்அணாபைசாதம்பிடி (1947க்குப் பின் மதிப்பிழக்கப்பட்டது)
ருபாய்16 அணா64 பைசா192 தம்பிடி
அரை ருபாய்8 அணா32 பைசா96 தம்பிடி
கால் ருபாய்4 அணா16 பைசா48 தம்பிடி
1/8 ருபாய்2 அணா8 பைசா24 தம்பிடி
1/16 ருபாய்1 அணா4 பைசா12 தம்பிடி
1/32 ருபாய்அரை அணா2 பைசா6 தம்பிடி
1/64 ருபாய்1/4 அணா1 பைசா3 தம்பிடி

இது இந்திய குடியரசு உருவாகும் வரையான மாற்றங்கள் நடந்துவந்த காலகட்டத்தில் இருந்த நாணய முறைகளைக் காட்டுகிறது.

1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா குடியரசாக ஆகும்வரை பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் பின்வருமாறு:

ஜார்ஜ் VI வரிசை (சுதந்திர இந்தியா) (1947 – 1950)

ஜார்ஜ் VI வரிசை (சுதந்திர இந்தியா) (1947 – 1950)

இந்தியக் குடியரசு 1950-1957

1950 சனவரி 26 அன்று, இந்தியா ஒரு குடியரசாக ஆனது. 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று புதிய தொடர் வரிசை நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாணயத்தில் பிரித்தானிய அரசரின் உருவப்படத்துக்கு பதிலாக அசோகத் தூணின் சிங்க உருவம் இடம்பெற்றது. ஒரு ருபாய் நாணயத்தின் பின்புறம் இடம்பெற்ற புலிக்கு பதிலாக தானியக் இடம்பெற்றது. இந்த மாற்றமானது முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதைக் குறிப்பதாக அமைந்தது. முந்தைய நாணய அமைப்பு மற்றும் நாணயத்தின் பழைய அலகுகள் மாறாமல், புதிய நாணயங்கள் அச்சிடப்பட்டன.

இந்தியக் குடியரசின் தசம்படுத்தப்படுவதற்கு முந்தைய தொடர் (1950 – 1957)

இந்தியக் குடியரசின் தசம்படுத்தப்படுவதற்கு முந்தைய தொடர் (1950 – 1957)

தசமமுறையாக்கம்

1955 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்ட இந்திய நாணயச் சட்டமானது நாட்டின் நாணய முறையை தசம முறையை பின்பற்றி மாற்ற திருத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் 1957 ஏப்ரல் 1, 1957 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகு அணா, தம்பிடி நாணய அலகுகுகள் இல்லாமல் போயின. ருபாயின் பெயரும், மதிப்பும் மாற்றப்படவில்லை. ஆனால் ருபாயிக்கு இணையான அலகுகளான 16 அணா அல்லது 64 பைசா என்பதற்கு பதிலாக 100 நயா பைசா என்ற அலகு உருவாக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு சூன் 30 ஆம் தேதி முதல் 25 பைசாவுக்கு குறைவான மதிப்புள்ள நாணயங்கள் அதிகாரப்பூர்வமாக செல்லாதவையாக்கப்பட்டன.

தசம முறைக்கு-முந்தைய நாணயங்கள் (1950-1957; மாற்றத்துக்கான முடிவு 1955)தசம நாணயத்துக்கு மாற்றம் (1957–தற்போதுவரை)தசம நாணயங்கள் (அச்சிட்ட ஆண்டு )
இல்லை10 ருபாய்2006–தற்பொதுவரை
இல்லை5 ருபாய்1992–தற்பொதுவரை
இல்லை2 ருபாய்1982–தற்பொதுவரை
ருபாய்ருபாய் ( 100 நயா பைசாக்களாக பிரிக்கப்பட்டது தற்போது பைசா 1957-1964; 100 பைசாக்களாக பிரிக்கப்பட்டது 1964–தற்போதுவரை.1962–தற்பொதுவரை
அரை ருபாய்50 பைசா1960–தற்பொதுவரை
கால் ருபாய்25 பைசா1957-2002. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது.
இல்லை20 பைசா1968-1994. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது
2 அணா10 பைசா1957-1998. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது
அணா5 பைசா1957-1994. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது
இல்லை3 பைசா1964-1972; முதல் 1981 வரை அச்சிடப்பட்டது. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது.
அரை அசா2 பைசா1957-1979; முதல் 1981 வரை அச்சிடப்பட்டது. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது.
தம்பிடிபைசா1957-1972; முதல் 1981 வரை அச்சிடப்பட்டது. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது,

நாணயங்கள் 1957-தற்போதுவரை (தசமம்)

நயா பைசா தொடர் 1957–1963

தசம முறைக்கு மாறிய காலகட்டத்தில் புதியதாக அறிமுகமான பைசாவை வேறுபடுத்திக்காட்ட நயா பைசா என அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று முதல் நயா என்ற சொல் கைவிடப்பட்டது. பைசா நாணயங்களான 50, 25, 10, 5, 2, 1 ஆகிய பின்ன மதிப்பிலான நாணயங்களில் அதன் மதிப்பைக் குறிக்க தேவநகரி எழுத்தில் குறிப்பிடப்பட்டன.

நயா பைசா தொடர் (1957 – 1963)

.பைசா தொடர் I 1964 முதல் தேவநாகரியில் பைசா மதிப்பு எழுத்தில் இடம்பெற்ற நாணயங்கள்

1964 ஆண்டுக்குப் பிறகு நயா பைசா என்பதில் இருந்த நயா என்ற சொல் கைவிடப்பட்டு நாணயங்கள் மறுபடியும் மாறின. ஒரு ரூபாயிக்கு குறைந்த பைசா மதிப்பு நாணயங்களில் பைசாக்களின் மதிப்பை நாணயத்தில் தேவநகரி எழுத்தால் குறிப்பிடும் வழக்கம் தொடர்ந்த நிலையில் 1964 இல் வந்த புதிய வடிவமைப்பு நாணயங்களில் இது மாற்றப்பட்டது.

பைசா தொடர் I தேவநாகரியில் நாணய மதிப்புடன் (1964 – 1980s)

தொடர் II தேவநாகரியில் பைசா மதிப்பு எழுத்தில் இடம்பெறா நாணயங்கள் (1964 – 1983)

1965 இலிருந்து தயாரிக்கப்பட்ட நாணயங்களில் நாணய மதிப்பை தேவநாகரி எழுத்தில் முழுமையாக குறிப்பிடுதல் இருக்கவில்லை. குறைந்த மதிப்பு நாணயங்கள் வெண்கலம், நிக்கல்-வெண்கலம், செப்பு-நிக்கல், அலுமினிய-வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்டு செய்யப்பட்ட நிலையில், சிறிய வகை நாணயங்கள் படிப்படியாக அலுமினியத்தில் தயாரிக்கப்பட்டன. 1964 ஆம் ஆண்டில் புதிய அலகாக 3 பைசா நாணயம் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது, இது 1971 வரை தொடர்ந்து அச்சிடப்பட்டது. 1965 முதல் ஒன்று மற்றும் இரண்டு பைசா நாணயங்கள் அலுமினியத்துக்கு மாற்றப்பட்டு, நாணய மதிப்பை தேவநாகரி எழுத்தில் இல்லாமல் அச்சிடப்பட்டன. 1968 ஆம் ஆண்டில் 20 பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது, இது 1971 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.

தொடர் II தேவநாகரியில் நாணய மதிப்பு குறிப்பிடப்படாமல் (1964 – 1983)

தொடர் III 1982 முதல்

1982 ஆம் ஆண்டு முதல், புதிய தொடர் வரிசையாக 20 பைசா நாணயம் வெளியிடப்பட்டது. இந்த மதிப்புடைய நாணயம் கடைசியாக அதற்குமுன் 1971 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டிருந்தது, இது மீண்டும் அச்சிடப்பட்டது என்றாலும் இம்முறை அலுமினியத்தில் அச்சிடப்பட்டது. 10 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய் நாணயங்களின் வடிவமைப்பு மற்றும் அளவு மாற்றப்பட்டது, அதே உலோகத்தில் தொடர்ந்து அச்சிடப்பட்டது. 3 பைசா, 2 பைசா, 1 பைசா நாணயங்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டன என்றாலும் அவை சட்டப்படி செல்லத்தக்கவையாகவே இருந்தன.

தொடர் IV 1988 முதல்

தொடர் IV காலகட்டத்தில் 5 பைசா மற்றும் 20 பைசா நாணயங்கள் ஆகியவை அச்சிடுவது நிறுத்தப்பட்டன. 10 பைசா, 25 பைசா, 50 பைசா நாணயங்கள் போன்றவை துறுவேறா எஃகினால் தயாரிக்கப்பட்டன. 1992 ஆண்டு முதல், 1 ரூபாய் நாணயமும் துருவேறா எஃகினால் தயாரிக்கப்பட்டன. மற்றும் ரூ. 2 மற்றும் ரூ. 5 நாணயங்கள் காப்பர் நிக்கலில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. ரூ .1, ரூ 2, ரூ 5 ஆகியவற்றின் நோட்டுகளை அடிக்கடி அச்சிடுவதில் ஏற்படும் மிகுதியான செலவில் இருந்து விடுபட இந்த வகை நாணயத்திற்கு வழிவகுத்தது. இந்த நாணயங்கள் அச்சிடுவது 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. கப்பர்-நிக்கல் நாணயங்கள் அச்சிடுவது பிறகு நிறுத்தப்பட்டு, இரண்டு மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களும் துறுவேறா எஃகினால் தயாரிக்கப்படுவது துவங்கியது.

2004 ஒற்றுமை பன்முகத்தன்மை தொடர்

2004 இல், இந்திய ரிசர்வ் வங்கி புதியதாக ஒரு ரூபாய் வரிசையை வெளியிட்டு, அதைத்தொடர்ந்து 2 ரூபாய் நாணயத்தையும் 2005 இல் அதன் பிறகு 2005 இல் 10 ரூபாய் நாணயத்தையும் வெளியிட்டது. இவை 2006 ஆம் ஆண்டில் ஓரளவு புழக்கத்தில் வந்தன, மேலும் அவற்றின் வடிவமைப்பு குறித்து சர்ச்சை ஏற்படுத்தப்பட்டது. 10 ரூபாய் நாணயவகையானது இந்தியாவில் அப்போதுதான் புதியதாக வெளியிடப்பட்ட நாணயங்களாக இருந்தன. அந்த நாணயங்கள் வெளியடப்பட்டும், நாணயத்தின் பெரும்பகுதி புழக்கத்துக்கு வராமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் இந்த இரு உலோக நாணயங்களை பலர் சேகரித்துவைத்ததே காரணமாகும்.

2004 ஒற்றுமை பன்முகத்தன்மை தொடர்

2007 அஸ்த முத்திரைத் தொடர்

2007 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய நாணயத் தொடர்களை வெளியிட்டது, இந்த அஸ்த மூத்திரைத் தொடர், நாணயங்களில் 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய் நாணயங்களில் வெளியிடப்பட்டது. இந்த நாணயங்கள் துருப்பிடிக்காத எஃகு நாணயங்கள் ஆகும். மேல்லும் இதில் இந்திய பாரம்பரிய நடண கை சைகைகளான பல்வேறு அஸ்த முத்திரைகளை இடம்பெற்றன. 5 ரூபாய் நாணயங்கள் வடிவமைப்பில் அலைகள் கொண்ட துருப்பிடிக்காத எஃகு நாணயங்களாக 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. அதே போல் 2008 ஆம் ஆண்டில் ஒரு புதிய 10 ரூபாய் நாணயமும் வடிவமைப்பில் மாற்றப்பட்டது. 5 ரூபாய் நாணய வடிவமைப்பு மீண்டும் முந்தைய வடிவமைப்பிற்குத் திரும்பியது, இருப்பினும் இப்போது அது செப்பு நிக்கல் உலோகத்துக்கு பதிலாக நிக்கல்-வெண்கல உலோகத்தில் வெளியிடப்பட்டது. எனினும் இந்த 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் அஸ்த முத்திரைத் தொடரின் பகுதியாக இருக்க இல்லை.

2007 2007 அஸ்த முத்திரைத் தொடர்

5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் 2007, 2008, 2009 இல் பொதுவான புழக்கத்துக்கு வெளியிடப்பட்டு வந்தன, மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்புகள் 2011 இல் ரூபாய் தொடர் அறிமுகப்படுத்தப்படும் வரை தொடர்ந்தன.

2007 – 2010 இல் பொதுவக புழக்கத்தில் விடப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள்

2011 புதிய தொடர் ரூபாய் சின்னத்துடன் (₹)

2011 இல், 50 பைசா, ₹ 1, ₹ 2, ₹ 5, ₹ 10 ஆகியவற்றில் ரிசர்வ் வங்கி ஒரு தொடரை வெளியிட்டது. 50 பைசா, ₹ 1, ₹ 2, ₹ 5 நாணய வடிவமைப்பில் 50 பைசா நாணயத்தில் மட்டும் ரூபாயின் சின்னம் இல்லாமல் இருந்தது. ₹ 10 நாணயம் இரு உலோக நாணயமாகவே வெளியிட்டது.

நாணய ஆலைகள்

உள்நாட்டு ஆலைக் குறியீடுகள்

  • கொல்கத்தா – நாணயத்தில் எவ்வித தனிக்குறியீடும் இருக்காது
  • மும்பை – நாணயத்தின் தேதியின் கீழ் வைரக் குறி.
  • ஐதராபாத் – நாணயத்தின் தேதிக்கு கீழை ஐந்து-முனை நட்சத்திரம்
  • நொய்டா – நாணயத்தின் தேதிக்கு அடியில், சிறு புள்ளி (துளையுடன்)

நாணயங்களின் தேவை அதிகரிப்பின் காரணமாக, நாட்டின் வரலாற்றில் பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் உள்ள நாணய ஆலைகளில் இந்திய நாணயங்களை அச்சிட இந்திய அரசாங்கம் கட்டாயத்துக்கு உள்ளானது.

வெளி நாட்டு காசாலைகள்

  • பிரிட்டோரியா – தேதியின் கீழ் வைரம், 1943.
  • சியோல் – நாணயத்தின் தேதியின் கீழ் ஒரு ஐந்து முனை நட்சத்திரம் ஆனால் சரியாக 1985 மற்றும் 1997 தேதிகளில் முதல் அல்லது கடைசி எண்கள் கீழே.
  • பிர்மிங்ஹாம் (ராயல் மிண்ட், இங்கிலாந்து) – நாணயத்தின் தேதிக்கு கீழை ஒரு சிறிய புள்ளி ஆனால் சரியாக 1985 ஆம் ஆண்டின் முதல் இலக்கத்திற்கு கீழே உள்ளது.
  • ஹீட்டன் பிரஸ் – 1985 என்ற ஆண்டு எண்ணின் கடைசி எண்ணிக்கீழ் “H” என்ற எழுத்து.
  • ஒட்டாவா – நாணயத்தின் தேதியின் கீழ் “C” என்ற குறியீடு.
  • மெக்ஸிக்கோ நகரம் – நாணயத்தின் தேதிக்கு கீழ் “M” புதினா குறி.

டேகூ, கொரியா, ஸ்லோவாகியா (க்ரேம்ந்கா), ரஷ்யா (மாஸ்கோ) ஆகிய இடங்களில் உள்ள காசாலைகளும் பயன்படுத்தப்பட்டன.