வாட்ஸ்அப்பில் ’இன்-ஆப் நோட்டிபிகேஷன்’ என்ற புதிய அம்சம் அறிமுகம்

WhatsApp_In_App_Notifications

வாட்ஸ்அப் என்பது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உடனடி செய்தி தளங்களில் ஒன்றாகும். பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த மெசேஜிங் சேவை அதன் பயன்பாட்டின் எளிமைக்காக மிகவும் பிரபலமானது. மேலும் நிறுவனம் வாட்ஸ் அப் குறித்த பல அற்புதமான அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், பயனர்கள் வாட்ஸ் அப் குறித்த அப்டேட்டுகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் செயலியில் இன்-ஆப் நோட்டிபிகேஷன்ஸ் (in-app notifications) என்ற புதிய அம்சத்தை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் ’இன்-ஆப் நோட்டிபிகேஷன்’ என்ற புதிய அம்சம் அறிமுகம்
வாட்ஸ்அப்பில் ’இன்-ஆப் நோட்டிபிகேஷன்’ என்ற புதிய அம்சம் அறிமுகம்

இந்த புதிய வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் அம்சம் மூலம் நிறுவனம் தங்களது பல புதிய அப்டேட்டுகளை பயனர்களுக்கு தெரிவிக்க அனுமதிக்கும். செட்டிங்ஸ் ஆப்ஷன் மூலம் பயனர்கள் இந்த அம்சத்தை இயக்கவோ, முடக்கவோ முடியும். பெயர் குறிப்பிடுவது போலவே இந்த அம்சம், பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியைத் திறக்கும்போது இரு வெவ்வேறு முறைகளில் அலெர்டுகள் அல்லது பிற நோட்டிபிகேஷன்களை அனுப்பும்.

இந்தியாவில் வாட்ஸ் அப் செயலியின் iOS பதிப்பைக் கொண்ட பயனர்களுக்கு இன்-ஆப் அறிவிப்புகள் தற்போது கிடைக்கின்றன. மேலும் Android பயனர்கள் விரைவில் இந்த அம்சனத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அம்சம் குறித்த கூடுதல் விவரங்களை நிறுவனம் விரைவில் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் iOS பயனர்களுக்கான வாட்ஸ்அப் செயலியில் “செட்டிங்ஸ்> நோட்டிபிகேஷன்ஸ்> இன்-ஆப் நோட்டிபிகேஷன்ஸ்” (Settings> Notifications> In-App Notifications) என்ற விருப்பத்தை ஆக்டிவ் செய்வதன் மூலம் அம்சத்தின் தன்மையை சரிபார்க்கலாம்.

மேலும், அதில் பயனர்கள் அலெர்ட் ஸ்டைலை தேர்ந்தெடுக்க முடியும். இதில் பயனர்கள் நன்(None), பேனர்ஸ் (Banners) மற்றும் அலெர்ட் உள்ளிட்ட மூன்று விருப்பங்களைப் பெறுவார்கள். பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த மெசேஜிங் நிறுவனம் இந்த விருப்பங்களைப் பற்றி விளக்கம் அளித்துள்ளது. அதில் பேனர்கள் (Banners) விருப்பத்தைத் தேர்வு செய்யும்போது நோட்டிபிகேஷன்கள், திரையின் மேற்புறத்தில் தோன்றி தானாகவே விலகிச் செல்கின்றன. அதே நேரத்தில் அலெர்டுகள் (Alerts) விருப்பத்தைத் தேர்வு செய்யும்போது “தொடர்வதற்கு முன் நடவடிக்கை தேவை” (requires action before proceeding) என்ற நோட்டிபிகேஷன் பயனர்களுக்கு தோன்றும்.

How to customize in-app notifications in WhatsApp

இதேபோல், நன் (None) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்தால் பயனர்கள் வாட்ஸ் அப் திறந்திருக்கும்போது எந்தப் பயன்பாட்டு எச்சரிக்கைகளையும் பெற மாட்டார்கள். இதுதவிர பயனர்கள் நன் என்ற விருப்பத்தைத் தவிர்த்து மற்ற இரண்டு விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், அவர்கள் ஒலி மற்றும் அதிர்வு விருப்பங்களையும் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த புதிய இன்-ஆப் அம்சம், வாட்ஸ்அப்பில் கிடைக்கும் புதிய அப்டேட்டுகள் குறித்த அலெர்ட்களை அனுப்ப நிறுவனத்திற்கு உதவுகிறது. செயலியில் உள்ள மாற்றங்களைப் பற்றி டெலிகிராம் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு எவ்வாறு அறிவிக்கிறது என்பதை இந்த அம்சம் ஓரளவு ஒத்திருக்கிறது.இருப்பினும், வாட்ஸ்அப் தளம் ஒரு பிரத்யேக சாட்போட்டைப் (ChatBot) பயன்படுத்துகிறது. பயன்பாட்டு அறிவிப்பு அம்சம் ஆரம்பத்தில் WABetaInfo-ஆல் கண்டுபிடிக்கப்பட்டது. WABetaInfo என்பதும் பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் ஆகும். பிப்ரவரி 2021ல் இது தனது சேவை விதிமுறைகளைப் புதுப்பிக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. பயனர்கள் புதிய கொள்கைகள் மற்றும் தனியுரிமையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், WhatsAppக்கான அணுகலை இழக்க நேரிடும். வாட்ஸ்அப் தொடர்பான மற்றொரு புதிய அம்சத்தை, நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இது பயனர்கள் தங்களது ஒவ்வொரு அரட்டையிலும் வெவ்வேறு தனிப்பயன் வால்பேப்பர்களை வைக்க அனுமதிக்கும். அதேபோல, ஒரு புதிய ஸ்டிக்கர் தேடலையும், புதிய ஸ்டிக்கர் சேகரிப்பையும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அம்சம் வரும் வாரங்களில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts