வாட்ஸ்அப் பே: பணம் அனுப்பும் வசதி அறிமுகம்!

WhatsApp Pay

வாட்ஸ்ஆப் செயலி பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலி மூலம் செய்திகள், தகவல்கள் போன்றவற்றை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்த்த ஒரு அம்சத்தை வெளியிட்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். அது வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் ஆகும், இது ஆப்பின் வழியாக பணம் அனுப்ப உங்களை அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டின் துவகத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களுடன் நாட்டில் அதன் கட்டண சேவையை சோதிக்கத் தொடங்கியது. இப்போது அது இறுதியாக அனைவருக்குமான ஒரு அம்சமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

WhatsApp Pay

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மேண்ட்ஸ் அம்சம் அணுக கிடைக்கிறது. உங்களுக்கு இது இன்னமும் கிடைக்காத பட்சத்தில் வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனை நீங்கள் நிறுவலாம், அதன்பின்பு முயற்சி செய்யலாம்.

குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் 160-க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் பரிவர்தனைகளை இயக்க Unified Payment Interface (UPI) ஐ பயன்படுத்தி National Payments Corporation of India (NPCI) உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய வாட்ஸ்அப் சேவை 10 இந்திய பிராந்திய மொழிகளில் அணுக கிடைக்கிறது. இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த உங்களுக்கு தேவையானது எல்லாம் – யுபிஐக்கு ஆதரவளிக்கும் ஒரு வங்கியின் டெபிட் கார்டு மட்டுமே ஆகும். இது இருக்கும் பட்சத்தில் இதை நீங்கள் உடனடியாக பயன்படுத்தலாம்.

WhatsApp Payment

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி ஆன மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தது என்னவென்றால், இப்போது நீங்கள் மெசேஜை அனுப்புவது போல உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் மூலம் எளிதாகபணம் அனுப்பலாம். இதற்காக கூடுதல் கட்டணம் இருக்காது. இதில் 140 வங்கிகளுக்கான ஆதரவும் இருக்கும். இது வாட்ஸ்அப் என்பதால் பாதுகாப்பானது மற்றும் தனிப்பட்டதும் கூட. மேலும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது என்பதை உறுதிப்படுத்த எல்லாவற்றையும் மேற்பார்வையிடும் National Payments Corporation of India உடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Related posts