உங்கள் வாட்ஸ்-அப் சாட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் முறைகள் என்னென்ன?

How to keep your whatsapp chats safe

இந்தியாவில், 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் வாட்ஸ்அப் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த வாட்ஸ்அப் தனியுரிமை மற்றும் தகவல்தொடர்பு ரகசியத்தை உறுதிப்படுத்துகிறது.

வாட்ஸ்அப் மெசஞ்சர் இப்போது உலகின் மிகவும் பிரபலமான தகவல் தொடர்பு ஆப்ஸ்களில் ஒன்றாகும், மேலும் இது பதிவிறக்கம் செய்வது இலவசம். வாட்ஸ்அப்பை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து எளிதாக சாட் செய்யலாம், அத்துடன் உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் போன்றவற்றையும் பகிரலாம். வாட்ஸ்அப் என்பது உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் ஆப்ஸ்களில் ஒன்றாகும்.

இது அதன் பயனர்களுக்கு புதிய மற்றும் பயனுள்ள அம்சங்களைச் அளித்துக் கொண்டே இருக்கிறது. ஒப்பீட்டளவில் மெதுவான இணையத்திலும் கூட வாட்ஸ்அப் நன்றாக வேலை செய்யும் ஒரு சிறந்த தகவல் தொடர்பு கருவியாக உள்ளது. வீடியோ அழைப்புகள் முதல் வாய்ஸ் மெசேஜ் வரை மீடியா பைல்ஸ்களைப் பகிர்வது வரை, பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு நிறைய விஷயங்களை மிகவும் எளிமையாக்கியுள்ளது. 

How to keep WhatsApp chats safe

இந்தியாவில், 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் வாட்ஸ்-அப் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த வாட்ஸ்அப் தனியுரிமை மற்றும் தகவல்தொடர்பு ரகசியத்தை உறுதிப்படுத்துகிறது. ஆனால் ஒரு நபரின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வாட்ஸ்அப்பின் திறனைப் பற்றி சில கேள்விகள் அல்லது கவலைகள் எழுகின்றன. உங்கள் வாட்ஸ்அப் சாட்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், நீங்கள் செய்யக்கூடிய மூன்று எளிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ்அப்பில் இரண்டடுக்கு ஆதென்டிகேஷனை இயக்கவும் (Two-Factor Authentication) : 

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை இரண்டடுக்கு ஆதென்டிகேஷனை பாதுகாப்புடன் செயல்படுத்தலாம். நீங்கள் ஒரு புதிய போனில்  வாட்ஸ்அப்பை பதிவிறக்கம் செய்து உள்நுழைய முயற்சித்தால், வாட்ஸ்அப் உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு சரிபார்ப்புக் குறியீட்டை அனுப்பும். உள்நுழைந்து வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த இந்த பதிவுக் குறியீடு உங்களுக்குத் தேவைப்படும். உங்கள் பதிவு செய்யப்பட்ட போன் நம்பரைத் தவிர, சரியான பயனர் உள்நுழைவதை உறுதிசெய்ய வாட்ஸ்அப்பின் மற்றொரு வழி குறியீடு தான். நீங்கள் வாட்ஸ்அப்பிடம் கேட்காமலே திடீரென்று அதிலிருந்து ஒரு குறியீட்டைப் பெற்றால், அதைப் புறக்கணித்து, யாருடனும் குறியீட்டை பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஹேக்கர்கள் பெரும்பாலும் அறிமுகமானவர்களாக காட்டிக்கொண்டு வாட்ஸ்அப் கணக்குகளை தங்கள் சொந்த செயல்களுக்கு லாக் செய்து உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம்.

கவனத்திற்கு: நீங்கள் கேட்கும் வரை வாட்ஸ்-அப் ஒருபோதும் உங்களுக்கு  குறியீட்டை அனுப்புவதில்லை.உங்கள் ஆப்ஸை லாக் செய்யவும்: 

இந்த நாட்களில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் கடவுச்சொல் அல்லது உங்கள் கைரேகை அல்லது ஃபேஸ் ஐடி (Face ID) போன்ற பயோமெட்ரிக்ஸ் மூலம் ஆப்ஸை லாக் செய்வதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குகின்றன. ஆப்ஸை லாக் செய்ய உங்கள் ஸ்மார்ட்போன் அனுமதித்தால், நீங்கள் அதை செய்ய வேண்டும். மேலும், வாட்ஸ்அப் மட்டுமல்ல, உங்கள் வங்கி ஆப்ஸ்கள் மற்றும் பேமெண்ட் ஆப்ஸ்கள் போன்ற பிற முக்கியமான ஆப்ஸ்களையும் லாக் செய்யவேண்டும். 

Also read… வாட்ஸ்அப் பே: பணம் அனுப்பும் வசதி அறிமுகம்!

சாட் காப்புப்பிரதிகளை முடக்குதல் (Turn off chat backups) :

உங்கள் எல்லா சாட்களையும் காப்புப் பிரதி எடுக்க விருப்பத்தை வாட்ஸ்அப் வழங்குகிறது. சில எளிய படிகளில், உங்கள் வாட்ஸ்அப் சாட்களை புதிய சாதனத்தில் எளிதாக மீட்டெடுக்கலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமும் அதை செய்யலாம். உங்கள் சாட்கள் எத்தனை முறை காப்புப் பிரதி எடுக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கும் விருப்பத்தைத் தவிர, வாட்ஸ்அப் அதை அணைக்கும் (Off) விருப்பத்தையும் வழங்குகிறது.

இப்போது, உங்கள் சாட்களின் காப்புப்பிரதிகள் தேவையில்லை என்று நீங்கள் நினைத்தால், செட்டிங்ஸ்களை மாற்றி, ”Never’ அல்லது ‘Only when I tap “Back up”‘ என்பதைத் தட்டும்போது மட்டுமே தேர்ந்தெடுக்கலாம். சாட்கள் எதுவும் சேமிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த இந்த ஒரு செயல்முறையை நீங்கள் செய்யவேண்டும், நீங்கள் அதை மேனுவலாக செய்யாவிட்டால் உங்களுக்கு காப்புப்பிரதி இருக்காது.

Related posts