புகைப்படம், வீடியோக்களை பகிர்ந்து கொள்ள புதிய வசதியை சோதனை செய்யும் ஃபேஸ்புக்

Facebook_Google

ஃபேஸ்புக் நிறுவனம் புகைப்படம், வீடியோக்களை கூகுள் மற்றும் இதர சேவைகளுடன் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை சோதனை செய்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் புதிய அம்சத்தை சோதனை செய்கிறது. இந்த அம்சம் புகைப்படஙகள் மற்றும் மீடியா தரவுகளை மற்ற ஆன்லைன் சேவைகளுடன் பகிர்ந்து கொள்ள வழிசெய்யும்.

முதற்கட்டமாக ஃபேஸ்புக்கில் இருக்கும் மீடியா தரவுகளை கூகுள் போட்டோஸ் சேவைக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

இந்த அம்சம் முதலில் அயர்லாந்தில் உள்ள பயனர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்பின் பயனர் மதிப்பீட்டிற்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க இந்த அம்சம் 2020 ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் வழங்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கட்டுப்பாட்டு வாரியங்கள் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை இயக்குவதில் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறதா என ஆய்வு செய்து வருகிறது.

இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் புதிய டேட்டா போர்டபிலிட்டி விதிகளை அறிவித்துள்ளார்.

புதிய டேட்டா போர்டபிலிட்டி விதிகளை வெளியிட்டு இருப்பதுடன் பிரிட்டன், ஜெர்மனி, பிரேசில் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் விவாதம் செய்து வருகிறது.

Related posts