பாலக்கீரையில் சாம்பார் செய்வது எப்படி?

பாலக்கீரை சாம்பார்

பாலக்கீரை சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. இதில் பொதுவான பருப்புக்கூட்டு மசியல் என செய்வோம். ஆனால் பாலக் கீரையில் சுவையான சாம்பாரும் செய்ய முடியும்.

தேவையான பொருட்கள் :

பாலக் கீரை – 1 கட்டு
வேகவைத்த துவரம் பருப்பு – 1 கப்
சின்ன வெங்காயம் – 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி – 1
சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்துமல்லித்தழை – சிறிது

செய்முறை :

கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி கீரையை வேகவைத்து கொள்ளவும்.நன்றாக கீரை வெந்ததும் அதை மத்தால் மசித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

பிறகு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.புளியை கரைத்து வடிகட்டி ஊற்றவும்.வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.

உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து விடவும்.இறுதியில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Related posts