டீ அல்லது காஃபி அருந்தும் முன் தண்ணீர் குடிக்க வேண்டுமா..? நிபுணர்களின் கருத்து…

டீ, காஃபி எடுக்கும் முன் தண்ணீர் குடிப்பது ரிஸ்க்கை குறைக்குமா.!! டாக்டர் பிரியங்கா ரோஹத்கி பேசுகையில் டீ-யின் அமில தன்மை பற்றி வெகு சிலரே அறிந்திருக்கிறார்கள். அதாவது இந்த பானத்தை குடிக்கும் போது வயிற்றில் வாயுவை உருவாக்குகிறது. அதே போல டீ மற்றும் காஃபி இரண்டுமே வயிற்றில் அமிலத்தை உருவாக்குகின்றன. டீ-யின் pH மதிப்பு 6-ஆகவும், காஃபியின் pH மதிப்பு 5 ஆகவும் உள்ளது. இவற்றை அதிக அளவில் எடுத்து கொண்டால், புற்றுநோய் அல்லது அல்சர் போன்ற சில அபாயகரமான நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம். ஆனால் டீ குடிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால், அதன் அமில விளைவுகளால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம். டீ அருந்துவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் குடலில் ஒரு லேயர் உருவாகிறது. இந்த லேயர் டீ குடிப்பதால் ஏற்படும் அமில விளைவை குறைக்கிறது என்றார்.


Source link

Related posts

Leave a Comment