சிறு பருப்பில் பான்கேக் ரெசிபி செஞ்சிருக்கீங்களா..? சுவைக்க மட்டுமலா.. ஆரோக்கியத்திற்கும் கூட..

உங்கள் குழந்தைகள் விரும்பும் ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு செய்முறையை பற்றி ஆன்லைனில் தேடுகிறீர்களா? அப்படியென்றால், இந்த மூங் டால் பான்கேக் ரெசிபி உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ருசியான பான்கேக்குகள் தயாரிப்பது எளிதானது மட்டுமல்லாமல், இது பருப்பு மற்றும் காய்கறிகளின் நன்மைகளால் நிரம்பியுள்ளது.

எனவே, இது உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சத்தான உணவாக அமைகிறது. கடையில் வாங்கும் பான்கேக்குகள் போலல்லாமல், மூங் டால் கேக்குகள் எந்த வித செயற்கையான சேர்ப்புகளும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. உங்கள் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான காலை உணவைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த ரெசிபி உதவுகிறது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவரால் பகிரப்பட்ட மூங் டால் பான்கேக் ரெசிபி அற்புதமான செய்முறையை கொண்டுள்ளது.

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சில எளிய பொருட்கள் மற்றும் எளிதான வழிமுறைகள் மூலம், இந்த ருசியான ரெசிபியை செய்து விடலாம்.

செய்வதற்குத் தேவையான பொருட்கள் : 

 • 1 கப் பாசி பருப்பு
 • 2-3 பச்சை மிளகாய்
 • 1 துண்டு இஞ்சி
 • சமையல் சோடா 1/2 டீஸ்பூன்
 • சிவப்பு மிளகாய் தூள் (சுவைக்கு ஏற்ப)
 • கொத்தமல்லி தூள்
 • மஞ்சள் தூள்
 • உப்பு (சுவைக்கு ஏற்ப)
 • 1 பெரிய வெங்காயம்
 • 2 நடுத்தர அளவு தக்காளி
 • 1 பெரிய குடைமிளகாய்
 • அரை கப் ஸ்வீட் கார்ன்

எப்படி செய்வது?

பாசி பருப்பை நன்கு கழுவி, சுத்தமான தண்ணீரில் சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பிறகு, அதை மீண்டும் கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

ஊறவைத்த பருப்பை ஒரு பிளெண்டர் ஜாடியில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து கொள்ளவும்.

பேஸ்ட் மிகவும் தடிமனாக இருந்தால், தேவைக்கேற்ப ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு தண்ணீர் சேர்க்கவும், ஆனால் மாவு மிகவும் நீர்த்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, இந்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதனுடன் பேக்கிங் சோடா, சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். பிறகு இந்த மாவை நன்றாக கலக்கவும்.

பாசி பருப்பு மாவுடன் காய்கறிகள் கலந்த பிறகு, ஒரு நான்-ஸ்டிக் கடாயை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும். பிறகு, ஒரு ஸ்பூன் மாவை எடுத்து கடாயில் ஊற்றி கரண்டியால் திடமாக சுற்றவும்.

குறைந்த வெப்பத்தில் சுமார் 2-3 நிமிடங்கள் சமைத்து கொள்ளவும். ஒரு பக்கம் வெந்தவுடன், மறுபக்கம் திருப்பி போடவும். இருபுறமும் பொன்னிறமாகும் வரை சமைக்கவும்.

அவ்வளவு தான், சுவையான மூங் டால் பான்கேக் ரெடியாகி விட்டது. இதை உங்களுக்கு பிடித்த சட்னி அல்லது கெட்ச்அப் உடன் சேர்த்து சூடாக பரிமாறி மகிழலாம். இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

First published:

Tags: Breakfast, Moong dal, Recipe


Source link

Related posts

Leave a Comment