காளான் பிரியாணி

காளான் பிரியாணி

தேவையான பொருட்கள் :

 1. சீரக சம்பா அரிசி – 500 கிராம் (அல்லது) 2 பெரிய டம்ளர்
 2. பட்டன் காளான் – 1 பாக்கெட்
 3. பெரிய வெங்காயம் – 1
 4. தக்காளி – 2 சிறியது
 5. பச்சை மிளகாய் – 3
 6. தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
 7. பிரியாணி மசாலா – 2 டீ ஸ்பூன்
 8. மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன் (காரத்திற்கேற்ப)
 9. கொத்தமல்லி, புதினா – 1 கையளவு
 10. எலுமிச்சை – 1/2 மூடி
 11. உப்பு – தேவையான அளவு
 12. தண்ணீர் – 4 டம்ளர் (கொதிக்க வைத்தது)

அரைக்க :

 1. சின்ன வெங்காயம் – 10
 2. பூண்டு – 10 பற்கள்
 3. இஞ்சி – 1 விரல் நீள துண்டு

தாளிக்க :

 1. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
 2. நெய் – 2 டேபிள் ஸ்பூன்
 3. முந்திரி – 6 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்)

செய்முறை :

 • அரிசியைக் களைந்து ஊற வைக்கவும்.
 • காளானை நன்றாகக் கழுவி நான்கு துண்டுகளாக நறுக்கவும்.
 • பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
 • கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
 • தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
 • சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை சிறிதளவு நீர் மட்டும் சேர்த்து பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், முந்திரி மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
 • பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
 • பிறகு தக்காளி மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும். பிரியாணி மசாலா, மிளகாய் தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
 • பிறகு காளானை சேர்த்து தேவையான அளவு உப்பு போடவும். காளானில் விடும் நீர் வற்றும் வரை வதக்கவும்.
 • பிறகு ஊறவைத்த அரிசியை சேர்த்துக் கலக்கி விட்டு, 4 டம்ளர் சூடான தண்ணீர் சேர்க்கவும். 1/2 மூடி எலுமிச்சையைப் பிழிந்து
  சேர்க்கவும். உப்பை சரிபார்த்து, குக்கரை மூடி விசில் போடவும்.
 • சரியாக இரண்டு விசில் மட்டும் விட்டு அடுப்பை அணைக்கவும்.
 • சூடான காளான் பிரியாணி ரெடி. தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Related posts