ஒரே வாரத்தில் 5 கிலோ குறைக்கணுமா?… தினமும் வெறும் வயிற்றில் இதை குடிங்க.. நல்ல ரிசல்ட் தெரியும்!

நம்மில் பலர் தொப்பையை கரைக்க பல விஷயங்களை முயற்சி செய்திருப்போம். ஆனால், என்ன செய்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை. ஒரு இன்சாவது தொப்பை குறையாதா? என கவலைப்படுபவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கான ஒரு அருமையான பணம் பற்றி நாங்கள் கூறுகிறோம்.

பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஜூஸ் ஒன்றினை கேரட், ப்ரக்கோலி பயன்படுத்தி எப்படி தயாரிப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ப்ரக்கோலி – 2.

கேரட் – 3.

எலுமிச்சை பழம் – 1.

பீட்ரூட் – 1.

முள்ளங்கி – 2.

வெள்ளரி – 1.

உப்பு, மிளகு – தேவையான அளவு.

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட ப்ரக்கோலி, பீட்ரூட், முள்ளங்கி, வெள்ளரி ஆகியவற்றை நன்கு கழுவி தோலை நீக்கி சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

இதனிடையே, எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

தற்போது, மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்து அதில் முதலில் முள்ளங்கி மற்றும் பீட்ரூட் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதையடுத்து, நறுக்கிய ப்ரகோலி மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைக்கவும். அதில், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்துக் மீண்டும் அரைத்துக் கொள்ளவும்.

Also Read | உங்க குழந்தை மீன் சாப்பிட அடம் பிடிக்குதா..? இப்படி சமைத்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க!

இறுதியாக இதில் எலுமிச்சை சாறு போதுமான அளவு சேர்த்து அரைத்து, வடிகட்டி எடுத்தால் ப்ரக்கோலி – கேரட் ஜூஸ் ரெடி.

இந்த ஜூஸை பருகும் போது சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து குடிக்கவும். தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் எப்பேர்பட்ட தொப்பையாக இருந்தாலும் ஒரே வாரத்தில் கரைந்து விடும்.

காய்கறிகளை சுத்தம் செய்து, பின் நறுக்கும் போது, வெள்ளரிக்காயின் தோல் நீக்காமல் நறுக்குவது நல்லது. வெள்ளரி தோலில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment