அடுத்த முறை புதினா சட்னி அரைக்கும்போது இதை சேர்த்து பாருங்க.. அப்புறம் அடிக்கடி செய்வீங்க..!

புதினா சட்னியை இன்னும் எப்படி சுவையாக மாற்றுவது என்றால் அதற்கும் வழி உண்டு. ஆம்… புதினா சட்னி அரைக்கும்போது அதனுடன் சின்ன வெங்காயம் சிலவற்றை சேர்த்து அரைத்து பாருங்கள். அதன் சுவை இதுவரை சுவைத்திடாத வகையில் இருக்கும். ரெசிபி இதோ…

தேவையான பொருட்கள் :

  • புதினா – 1 கைப்பிடி
  • கறிவேப்பிலை – 1கொத்து
  • சின்ன வெங்காயம் – 5
  • காய்ந்த மிளகாய் – 5
  • உப்பு – தே.அ

செய்முறை :

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி வதக்கிக்கொள்ளுங்கள்.

பின் அவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அதை ஒரு கிண்ணத்தில் வழித்து வைத்து கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதில் கொட்டினால் சட்னி ரெடி.

தோசை , இட்லிக்கு மட்டுமல்லாது சப்பாத்திக்குக் கூட இந்த சட்னி சுவையாக இருக்கும்.

First published:

Tags: Chutney Recipe in Tamil, Mint Chutney


Source link

Related posts

Leave a Comment