05 – பிப்ரவரி காலச்சுவடுகள்

அப்பல்லோ 14 விண்கலம்

1971 -ஆம் ஆண்டு அப்பல்லோ 14 விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய நாள். அமெரிக்காவால் சந்திரனில் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் 1971-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி அலன் ஷெப்பர்ட், ரூசா, எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.

1597

ஜப்பானின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.  

1649

ஸ்காட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.

1778

தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது.

1782

ஸ்பானியர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மினோர்க்கா தீவைக் கைப்பற்றினர்.

1782

ஓஹியோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.

Related posts