04 – பிப்ரவரி காலச்சுவடுகள்

யாசர் அரபாத்

1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பாலாஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூன்றாவது தலைவராக யாசர் அரபாத் நியமிக்கப்பட்டார்.

பாலாஸ்தீன முன்னாள் அதிபரான யாசர் அரபாத் எகிப்தில் பிறந்தார். கல்லூரியில் படிக்கின்றபோதே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை கேட்டறிந்து யூத மற்றும் சியோனிஸம் பற்றி நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்தார். சிவில் பொறியாளர் பட்டம் பெற்ற இவர் 1948-ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின்போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபு படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டார்.

1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பாலாஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூன்றாவது தலைவராக நியமிக்கப்பட்டார். 1980-களில் லிபியா-ஈராக்-சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து பண உதவி பெற்று, அதைக்கொண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலப்படுத்தினார்.

1990-ல் யாசர் அரபாத் தனது 61-வது வயதில் சுஹா தாவில் என்ற 27 வயது பாலாஸ்தீன கிறிஸ்தவ பெண்ணை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார். 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி தனது 75-வயதில் இறந்துவிட்டார். இவருடைய சாவில் ஏகப்பட்ட மர்மங்கள் நிறைந்திருந்தது.

1789

ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் தேர்வு செய்யப்பட்டார்.

1794

பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமைத் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது.

1834

இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக வெளியிடப்பட்டது.

1899

பிலிப்பைன்ஸ்-அமெரிக்கப் போர் ஆரம்பமானது.

1936

முதற்தடவையாக ரேடியம் இ என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது.

1966

ஜப்பான் போயிங் விமானம் டோக்கியோவில் வீழ்ந்ததில் 133 பேர் கொல்லப்பட்டனர்.

1976

குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.

1997

இஸ்ரேலில் இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதியதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.

1998

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

2007

ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய “பிரமாஸ்” ஏவுகணை ஒரிசா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

Related posts