01 – பிப்ரவரி காலச்சுவடுகள்

சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்த நாள்

1924 : சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்த நாள். ரஷ்யா அதன் அருகில் உள்ள நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியமாக விளங்கியது. அதை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்தது.

01 – பிப்ரவரி நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
1814

பிலிப்பைன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்

1832

ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை (mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது.

1864

டென்மார்க்- புரூசியா போர் ஆரம்பமானது.

1880

யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி (mail coach) சேவையை ஆரம்பித்தது.

1884

ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் முதற்பதிப்பு வெளியானது.

1893

தாமஸ் எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜெர்சியில் கட்டி முடித்தார்.

1908

போர்ச்சுக்கல் மன்னன் முதலாம் கார்லொஸ் மற்றும் அவனது மகன், இளவரசர் லூயிஸ் பிலிப் லிஸ்பன் நகரில் கொல்லப்பட்டனர்.

1913

உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயார்க் நகரில் திறக்கப்பட்டது.

1918

ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.

Related posts