NCRB report: பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்…

`காலையில பேப்பரை திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இதே செய்திகள்தான் இருக்கின்றன’ எனப் புலம்பும் பலரை கண்டிருப்போம். `குற்றம் நடந்தது என்ன’ எனக் குற்றம் நடந்த பின்னர் ஆராயப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டாலும் அல்லது விடுவிக்கப்பட்டாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

Crime

அதிலும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் “இந்தியாவில் குற்றங்கள் 2022” என்ற தலைப்பில் தேசிய குற்ற ஆவண காப்பகம் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய ஏஜென்சிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4 சதவிகிதமும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 8.7 சதவிகிதமும், மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் 9.3 சதவிகிதமும், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான குற்றம் 13.1 சதவிகிதமும், பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றம் 14.3 சதவிகிதமும் அதிகரித்துள்ளன.  

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… 

* 2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,45,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-ல் 4,28,278 ஆக இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 4 சதவிகிதம் அதிகம்.

Abuse

* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அவர்களின் வாழ்க்கைத் துணை அல்லது உறவினர்களால் 31.4 சதவிகிதமும், கடத்தல் மூலமாக 19.2 சதவிகிதமும் மற்றும் பாலியல் தொல்லைகள் மூலமாக 7.1 சதவிகித வழக்குகளும் பதிவாகி உள்ளன.

* 2022-ம் ஆண்டில் பதிவான மொத்த 31,516 வழக்குகளில் அதிகபட்சமாக 5,399 வழக்குகள் ராஜஸ்தானில் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் 3,690 வழக்குகளும், மகாராஷ்டிராவில்  2,904 வழக்குகளும், ஹரியானாவில் 1,787 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

 * டெல்லியில் கடந்த ஆண்டு 1,212 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. 

* ஒரு லட்சம் பெண்களுக்குப் பதிவு செய்யப்படும் குற்ற விகிதம் 2022-ல் 66.4 ஆக உள்ளது. 2021-ல் இந்த எண்ணிக்கை 64.5 ஆக இருந்தது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்…

*2022-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான 1,62,449 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 8.7 சதவிகிதம் (1,49,404 வழக்குகள்) அதிகம்.

* குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பெரும்பாலானவை கடத்தல் மற்றும் கடத்தல் தொடர்பான வழக்குகளாக உள்ளன.

* கடத்தல் தொடர்பாக 45.7 சதவிகித குற்றங்களும், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 39.7 சதவிகித குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடத்தல்

வயதானவர்களுக்கு எதிரான குற்றங்கள்…

* வயதானவர்களுக்கு எதிரான குற்றங்கள் 2021-ல் 26,110 ஆக பதிவாகி உள்ளன. 2022-ல் இந்த எண்ணிக்கை 9.3 சதவிகிதம் அதிகரித்து 28,545 வழக்குகளாக உள்ளன. 7,805 வழக்குகள் அல்லது 27.3 சதவிகித குற்றங்கள் திருட்டோடு தொடர்புடையவை, 3,944 வழக்குகள் போலி ஆவண வழக்குகளோடு தொடர்புடையவை, 3,201 வழக்குகள் மோசடி மற்றும் ஏமாற்று வேலையோடு தொடர்புடையவை. 

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள்… 

*பட்டியலினத்தவருக்கு (SC) எதிரான குற்றங்கள் 13.1 சதவிகிதம் அதிகரித்துள்ளன. 2021-ல் 50,900 வழக்குகளில் இருந்து கடந்த ஆண்டு 57,582 வழக்குகளாக உயர்ந்துள்ளன. 

*பழங்குடியினருக்கு (ST) எதிரான குற்றங்கள் 14.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 8,802 வழக்குகளில் இருந்து 10,064 வழக்குகளாக உயர்ந்துள்ளன. 

ஊழல்

பிற குற்றங்கள்…

*பொருளாதார குற்றங்கள் 11.1 சதவிகிதம் (1,74,013 வழக்குகள்) அதிகரித்துள்ளது.

*2021-ல் 3,745 ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன; 2022-ல் 4,139 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 10.5 சதவிகிதம் அதிகம். 

* 2021-ல் 52,974 ஆக இருந்த சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 24.4 சதவிகிதம் அதிகரித்து, 65,893 வழக்குகளாக உயர்ந்துள்ளன.

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?…


Source link

Related posts

Leave a Comment