தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா?

drinking water before bed time

பொதுவாக தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று கூறப்பட்டாலும் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது எல்லோருடைய உடல் நிலைக்கும் ஒத்துக்கொள்ளாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தூங்குவதற்கு முன்னர் காபி டீ பருகுவது உடல்நலத்தை பாதிக்கும் என்பது போல் தண்ணீர் எடுத்துக் கொண்டாலும் ஒரு சிலருக்கு ஒத்துக் கொள்ளாது என்றும் இரவில் தண்ணீர் பருகுவது தூக்கத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பொதுவான நல்ல உடல்நிலை உள்ளவர்கள் தூங்குவதற்கு முன் தண்ணீர் பருகுவது உடல் நிலையை கட்டுக்குள் வைத்த உதவும். மேலும் உடல் சூடாக இருந்தால் குளிரவைக்கும். உடலில் போதிய நீர்ச்சத்து இருப்பதும் உறுதி செய்யப்படும்.

ஆனால் அதே நேரத்தில் தூங்குவதற்கு முன் தண்ணீர் பருகுவது ஒரு சிலரின் உடல் நிலைக்கு ஒத்துக் கொள்ளாது. அது தூக்கத்தை தொந்தரவு செய்வது மட்டுமின்றி நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழ வேண்டிய நிலையில் ஏற்படும்.

என்ன பாதிப்பு ?

உண்மையில் இரவு என்பது நம்முடைய உடல் தானாகவே ஓய்வு எடுக்கும் நேரம். அப்போது உடல் நம்மை தொந்தரவு செய்யாது. அதில் சிறுநீர்ப் பையும் அடக்கம். அதனால்தான் சிறுநீர் பையில் எஞ்சியிருக்கும் நீரைக் கூட வெளியேற்றுவிட்டுத் தூங்க வேண்டும் என்ற காரணத்திற்காக தூங்கும் முன் சிறுநீர் கழிப்பார்கள். அதற்கு ஏற்ப நிம்மதியான தூக்கத்திற்கு நம்மை 7 முதல் 8 மணி நேரம் வரை சிறுநீர் பையும் தொந்தரவு செய்யாது.

தீர்வு..?

சாப்பிட்டவுடன் வெதுவெதுப்பாக தண்ணீர் அருந்துவது செரிமானத்திற்கு உதவும். நச்சு நீக்கம் செய்யும். மறுநாள் காலை மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்காது. எனவே தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பதை தவிருங்கள். அப்படியே குடிக்க வேண்டுமென்றால் வெதுவெதுப்பான தண்ணீர் அதுவும் தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் குடிப்பது மிகவும் நல்லது. சாதாரண தண்ணீரும் குடிக்கலாம், ஆனால் அதுவும் 30 நிமிடங்களுக்கு முன் குடிக்க வேண்டும்.

Related posts