வெயில் காலத்தில் வரும் வியர்க்குருவை தடுப்பது எப்படி?

வியர்க்குரு

வெயில் காலம் என்றாலே பலவிதமான நோய்கள் வரக்கூடிய காலம் என்பதும் குறிப்பாக பலருக்கு வியர்க்குரு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் வியர்க்குரு பிரச்சனை இருக்கும்.

பித்தம் அதிகம் இருப்பதன் காரணமாகவும் உடல் பருமன் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதன் காரணமாகவும் வியர்க்குரு வருவது உண்டு. வியர்க்குரு வந்தால் அதற்கு சந்தன பூசுவது மிகவும் சிறந்தது. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசி குளித்தால் வியர்க்குருவை தவிர்க்கலாம்.

அதேபோல் மஞ்சள் கிருமி நாசினி என்பதால் வேர்க்குருவை கட்டுப்படுத்தும். இரவு தூங்கு செல்வதற்கு முன்னர் கடுக்காய் நெல்லிக்காய் ஆகியவற்றை பொடியாக செய்து தண்ணீரில் கலந்து பருகினால் வேர்க்குரு மறைந்துவிடும்.

மஞ்சள் சந்தனம் வேப்பிலை ஆகிய மூன்றையும் சம அளவில் மை போல் அரைத்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி ஒரு மணி நேரத்துக்கு பிறகு குளித்தால் வியர்க்குரு மாயமாகிவிடும். சூடான தரையில் படுத்து உறங்காமல் காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்கினால் வேர்க்குரு வருவதை தடுக்கலாம்.

Related posts